உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

(13) ஆட்படையணி - Personification.

ஓர் அஃறிணைப்பொருளை உயர்திணையாகக் கூறுவது ஆட்படை

பணியாம்.

உ-ம்: கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தான்.

இறந்தோரையும்

பிரிந்தோரையும், உயிரற்ற

பொருள்களையும்

கருத்துகளையும், விளிப்பது விளியணி (Apostrophe) யாம்.

உ-ம்: “மரணமே! உன் கூர் எங்கே?”- புதிய ஏற்பாடு.

(14) ஏற்றவணி – Climax

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று மேலாகக் கூறுவது

ஏற்றவணியாம்.

உ-ம்: இலக்கணமும் இலக்கியமும் சேர்ந்தது இயற்றமிழ்; அதனொடு இராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ்; அதனொடு அபிநயமும் ஆட்டமும் சேர்ந்தது நாடகத்தமிழ்.

(15) இறக்கவணி - Anticlimax or Bathos

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று கீழாகக் கூறுவது

இறக்கவணியாம்.

உ-ம்: ஒரு நன்மையைப் பெரியோர் சொல்லாமற் செய்வர்; சிறியோர் சொல்லிச் செய்வர்; கீழ்மக்கள் சொல்லியுஞ் செய்யார்.

(16) ஒலியணி - On -Om - a- to - Poe- ia.

சொற்களின் ஒலியினால் அச்சம், வெகுளி முதலிய சுவை (ரசம்) தோன்றக் கூறுவது ஒலியணியாம்.

உ-ம்: உலகமெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும்படி ஓர் இடி முழங்கிற்று.