உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




65

V

வியாச வியல் - Essay Writing

1. கடிதமெழுதல் Letter - Writing

கடிதப் பகுதிகள்:

(1) இருக்கையும் தேதியும்

-

இருக்கையும் தேதியும் சாதாரணக் கடிதத்தில் வலப்புறம் மேலும், விண்ணப்ப மனுக்களில் இடப்புற அடியிலும் குறிக்கப் படல் வேண்டும்.

(2) முகவுரை

விண்ணப்பத்திலும் மனுவிலும்,

தலைப்பில்

இன்னாரிடமிருந்து

இன்னாருக்கு என்று, முகவரி (address) யுடன் எழுதுவது முகவுரையாகும். இது சாதாரணக் கடிதத்திற்கு வேண்டுவதன்று.

(3) விளி

Address or Salutation.

கடிதம் பெறுவாரைச் செய்தியறிவிக்கு முன் விளிப்பது விளியாகும்.

உ-ம்:

ஒருமை

நண்ப,

ஐய,

உயர்வுப்பன்மை நண்பரீர்,

ஐயரீர்,

பன்மை

நண்பர்காள், ஐயன்மீர்,

அன்பு குறித்தற்கு அருமை, அன்பார்ந்த என்னும் அடைகளையும் வணக்கங் குறித்தற்குக் கனம், கனம் பொருந்திய என்னும் அடைகளையும் விளிப்பெயர்க்கு முன் சேர்த்தல் வேண்டும்.

கனம் பொருந்திய ஐயா, என்று விளி முறையிலும், கனம் பொருந்திய ஐயாவுக்கு எழுதுவது என்று முகவுரை முறையிலும், கடிதங்களை இரு வகையாய்த் தொடங்கலாம்.

(4) செய்தி - Body of the Letter

அறிவிக்கப்படவேண்டிய செய்தி, அளவிற்கும் பொருளுக்குந் தக்கபடி, ஒரு பாகியாய் அல்லது பல பாகிகளா யிருக்கலாம்.

(5) முடிப்பு

-

Subscription

செய்தியின் கீழ் வலப்புறத்தில், தங்களின் தாழ்மையுள்ள, தங்களின் வணக்கமுள்ள, தங்களின் கீழ்ப்படிதலுள்ள, தங்களின் உண்மையுள்ள, தங்களின்