உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

அன்பான என்னும் தொடர்களில் ஏற்றதொன்று எழுதப்படலாம். இனத்தார்க் கெழுதியதாயின், எழுதுவார் தம் இனமுறையையுங் குறிக்கலாம். கீழோர்க் கெழுதியதாயின், வெறுமையாய் இங்ஙனம் என்று குறித்தால் போதும்.

(6) கையெழுத்து

Signature

முடிப்பின் கீழ்க் கையெழுத்திருத்தல் வேண்டும்.

(7) முகவரி அல்லது விலாசம் - Direction or Superscription கடிதத்தின் மறுபுறத்திலாவது, கடிதக் கூட்டின் (cover) மேற்புறத்திலாவது, கடிதம் பெறுவாரின் முழு விலாசமும் எழுதப்படல் வேண்டும்.

நண்பர்க்கும் சமானர்க்கும், திரு (ஸ்ரீ), திருவாளர் என்றும் பெரியோர்க்குத் திருமான் (ஸ்ரீமான்), மகா - ள-ள ஸ்ரீ கனம், மகாகனம், என்றும் அவரவர் நிலைக்கேற்ற அடைகொடுத்துப் பெயரெழுதல் வேண்டும். பெண்டிர்க்குத் திரு. திருமகள், திருமதி என்னும் அடைகளிலொன்று எழுதப்படலாம்.

இருபாலார்க்கும் உயர்வு கருதும்போது, பெயர்க்குப் பின் அவர்கள் என்று குறிப்பிடல் வேண்டும்.

முகவரி ஆங்கில முறையில் ஆட்பெயர், அலுவல், கதவெண், தெரு, தபால் நிலையம், தாலுகா, ஜில்லா, மாகாணம், தேசம் என்னும் முறையிலும், தமிழ் முறையில் இதன் தலைகீழாகவும் இருக்கலாம். இவற்றுள் முன்னதே சிறப்புடைத்தாம்.

2. வியாசம்

-

Essay

வியாச விதிகள் Rules of Composition

மாணவர் வகுப்புவியாசம், தலைப்பில் பொருள் குறிக்கப் பெற்றும், இடப்பக்கம் வரந்தை (margin) யில் மேலே வியாச எண்ணுந் தேதியுங் குறிக்கப்பெற்றும் பெரிதுஞ் சிறிதுமின்றி வழக்கமா யெழுதும் எழுத்தில், பொருட் கோவைபடப் பாகியமைப்புடன், உயர்தரப் பாடசாலை மாணவரதாயின் காற்றாட் பக்கத்தில் மூன்று பக்கமும், கல்லூரி மாணவரதாயின் காற்றாட் பக்கத்தில் ஆறு பக்கமும் பேரெல்லையாகவைத்து, எழுத்துப் பிழை சொற்பிழை பொருட் பிழைகளின்றித் தெளிவா யெழுதப்படல்வேண்டும். வியாச நோட்டுப் புத்தகங்களில் என்றும் வலப்புறமே எழுதி, இடப்புறமெல்லாம் பிழை திருத்த வெற்றிடமாய் விடல் வேண்டும்.

வியாசப் பொருளமைப்பு

வியாசப் பொருள் பொதுவாய், (1) முகவுரை அல்லது தோற்றுவாய், (2) பொருள் இலக்கணம் (Definition), (3) வகை, (4) கருவி, (5) செய்ம்முறை, (6) பயன், (7) உதாரணக் கதை, (8) முடிவு என்னும் எண் பாகுபாடு படுவதாகும்.

ஒருவரின் வாழ்க்கை வரலாறாயின் (1) பிறப்புவளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) இல்லறம், (5) அருஞ்செயலும் பொதுநலத் தொண்டும், (6) குணம்