உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியாச வியல்

67

அல்லது ஒழுக்கம் என்னும் அறுபாகுபாடு படுவதாகும். இவற்றுட் பொருட்கேற்பன கொண்டு, இடையிடை தொடர்மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் என்பன ஏற்ற பெற்றி யமைத்தெழுதல் நலம்.

ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துகள் அமைத்துக்கொண்டு, அல்லது ஒரு கதையைப் பல நிகழ்ச்சிகளாக வகுத்துக்கொண்டு, அவற்றை முறைப்படுத்தி ஒவ்வொன்றையும்பற்றி ஒவ்வொரு பாகி யெழுதவேண்டும்.

3. மாதிரி வியாசம்

-

Model Essay

நாகரிகம்

  • நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லினின்றும் பிறந்தது. நகரகம் என்பது முறையே நகரிகம், நாகரிகம் எனத் திரிந்தது. ஆங்கிலத்திலும் நாகரிகம்பற்றிய வினை நகரப்பெயரினின்றும் பிறந்ததே. (Civilise from Civitas (Latin), city)
  • நாகரிகம் என்னுஞ்சொல் நாகர் என்னும் பெயரினின்றும் பிறந்த தென்றும், நாகரென்பார் பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்திருந்தன ரென்றும், ஆயிரத்தெண்ணூறாட்டை முற்றமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகர் என்பார் பண்டைக்காலத்தில் நாகநா டெனப்பட்ட கீழ்த்திசை நாடுகளில் வாழ்ந்துவந்த ஒரு மக்கள் வகுப்பார். நாக வணக்கமுடைமையின் அவர் நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாகநாடு. நாகரில் நாகரிகரும் அநாகரிகருமான இருவகுப்பார் இருந்துள்ளமையும், அவருள் நாகரிகரும் எவ்விதத்தும் தமிழரினும் உயர்ந்தவரல்லர் என்பதும் மணிமேகலையா லறியப்படும். ஆதலால், நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரடிப் பிறந்ததன்று.

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை எனப் பொருள்படும். திருந்திய வாழ்க்கை உலகத்தில் முதன்முதல் நகரத்தில் தோன்றினமையின் நாகரிக மெனப்பட்டது. இக்காலத்தும் நாகரிகமில்லாதானைப் பட்டிக்காட்டா னென்றும், நாட்டுப்புறத்தானென்றும், பழித்தல் காண்க. நகரமல்லாதது நாடும் பட்டியும். * நாகரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர்,

"பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

என்னும் குறளில், கண்ணோட்டம் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். இது பரிமேலழகர் உரையால் விளங்கும். கம்பரும் இச் சொல்லை இதே பொருளில் ஆண்டுள்ளார். கண்ணோட்டம் திருந்திய குணங்களில் ஒன்றாதலின் நாகரிக மெனப்பட்டதென்க.

அறிவும் அதன்வழிப்பட்ட ஒழுக்கமுஞ் சேர்ந்து திருந்திய வாழ்க்கை யாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டு மிருப்பின், அது நாகரிகமாகாது அநாகரிகத் தின் பாற்படுவதேயாகும். ஒழுக்கமில்லாத கற்றோன் கற்ற மூடன் இழித்திடவேபடுவான்.

என