உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

93

17. விளம்பரம் விலக்கல்

பாராட்டுரை, படம்போடுதல், பிறந்த நாட் சிறப்புச் செய்தல். இத்தகைய விளம்பரங்களை விரும்பாதவர் பாவாணர். விரும்பாமையே அன்றி, அதனைச் செய்ய முனைவாரையும் வலிந்து தடுப்பவர் பாவாணர். புகழும் வேண்டாப் புகழ்மை தனிப்பாராட்டுக்குரியதே. ஆயினும் விளம்பர வித்தகவுலகில் அவரைப்போலும் விதிவிலக்கா அருமையர் அல்லரோ!

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் பொத்தகத்தின் அச்சு நிறைவுற்றபோழ்தில் அந்நூலில் பாவாணர் படத்தை ணைக்க விரும்பினார் கழக ஆட்சியாளர் திரு.வ.சு. ஆனால் பாவாணர். "என் உருவம் எடுக்க விருப்பமில்லை" என்று படம் எடுத்துக்கொள்ளுதலையே தவிர்த்துவிட்டார்!'

66

ம்

மேலும் வலியுறுத்தினார் திரு. வ.சு. அதற்குப் பாவாணர் இந்தப் பொத்தகத்தில் என் படம் பொறிக்கவேண்டேன். முதல் தாய்மொழி என்னும் அடுத்த பொத்தகத்தில் பொறித்துக் கொள்ளலாம். அதிலும் பொறிக்கவேண்டியது வகையைச் சென்னை வந்து சொல்வேன்”2 என்று வழுவிக்கொண்டார். அந்நூலிலும் வேறு எந்நூலிலும் அவர்படம் வந்ததில்லை.

து

பறம்புக்குடியில் உ.த.க. முதல் மாநாடு நிகழ்ந்த போ பாவாணர் படத்தை அச்சிட்டு வழங்குவதற்குப் பேரா. தமிழ்க்குடி மகனார் விரும்பினார். ஆனால் பாவாணர், “இயற்கையாகவே நான் தோற்றப்பொலிவில்லாதவன். அதையும் கேடாகக் காட்டின் என்னை இழிவுபடுத்துவதேயாம்" என்று மறுத்தார். மேலும், "கோலாலம்பூர் நாளேட்டில் என்படம் சரியாயில்லை. புன் செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் ஓரளவு திருத்தமாகப் படமெடுத்துள்ளனர். நான் நாற்காலியில் அமர்ந் திருக்கும் தென் மொழிப்படம் நன்றே என்று குறித்துப் புதுப்படம் எடுத்தல் விலக்கினார்.

1. 28-1-49 (வ.சு)

3. 16-10-69 (த.கு.)

2. 10-2-49 (வ.சு)

223