உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

94

24

அதே மாநாட்டு மலரில் பாவாணர் வாழ்க்கை வரலாறு வெளியிடும் வேட்கை எழுந்தது. அதனை. “என் வாழ்க்கை வரலாற்றை மாநாட்டு மலரில் வெளியிடவே கூடாது.' என்று மறுத்தார். “என் வாழ்க்கை வரலாறு மலரில் இருத்தல் கூடா தென்று மீண்டும் சொல்கிறேன்”5 என்று பின்னும் எழுதினார்.

மாநாட்டு உழைப்பும் தமிழுக்காக இருக்கவேண்டுமே யன்றித் தனி ஒருவர்க்காக இருத்தல் கூடாது என்பதைக் கடைப் பிடியாகக் கொண்ட பாவாணர்... “எனக்காகத் தொல்லை தாங்க வேண்டேன். தமிழின் பொருட்டுத் தாங்குக”% என்றார்.

மீட்போலை இதழ்ப் பொறுப்பாளர் பேரா.கு.பூங்காவனம் அவர்கள் பாவாணர் பிறந்தநாளின்போது, மீட்போலையைப் பிறந்த நாள் மலராக வெளிப்படுத்தப் பெரிதும் விரும்பினார். பாவாணர் இசைவும் வேண்டினார். பாவாணர், "எம் குடும்பத் தில் பிறந்த நாட் கொண்டாடும் வழக்கமில்லை. நானும் விளம்பர வெறுப்பினன். இதைப் பன்முறை சொல்லியும் சில கிளைகள் கேட்கவில்லை. மறைமலையடிகளையே மாண்பாக்க குறிப் பிடுக”7 என்று வரைந்தார்.

னிமேல் என்னைப்பற்றியே விளம்பரம் ஒன்றும் வேண்டேன். து எனக்கு மிகமிக வெறுப்பானது. பிறந்தநாள் சிறப்பிதழை நிறுத்திவிடுக என்று வன்மையாக மறுத்துவிட்டார் பாவாணர்.

98

ஒரு பொன்னாடை நிகழ்ச்சியைச் சுட்டுகிறார் பாவாணர்:

"பூம்புகார் இறுதிக் கூட்டத்திற்குப் பர்.மெ.சுந்தரமும் திரு.கருணையும் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். பேசச் சொன்னதற்கு மறுத்துவிட்டேன். ஆடைபோர்த்தக் கூட ாதென்று சொல்லியிருந்தேன். மகளிர் மஞ்சள் சட்டைத் துணி (4 முழும்) ஒன்றைத் திரு. கருணாநிதியிடம் கொடுத்திருந் தனர். அவர் பொன்னாடை போர்த்துவதாக அறிவிக்கப்பட்ட போது அம்மாபெருங் கூட்டத்தில் அவரை மதிப்பிழிவுபடுத்த மனமின்றி இசைந்தேன். அது மினுகை (சரிகை) யிழையற்ற மட்டப்பட்டு. 20 உரூபாவிற்கு மேற் பெறாது. அமைச்சர் மூவர்க்கும் தருமபுரத் தம்பிரான் போர்த்தியது. உண்மையான பொன்னாடை; ஒவ்வொன்றும்முந்நூறு உரூபா பெறும்.

4. 25-11-69 (த.கு.) 6.4-12-69 (த.கு.) 8. 6-3-80 (கு.பூ)

5. 1.122.69. (த.கு.) 7. 13-12-79 (கு.பூ)