உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

105

ஆராய்ச்சிகளில் தலைசிறந்தவர். உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க தமிழர். தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி அரிய நூல்கள் தந்தவர். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பரந்த புலமையுடையவர். வர் சென்னையில் வாழ்ந்த ஆண்டுகளில் அடிகளுடன் தொடர்ந்த தொடர்புகொண்டு தம்மாராய்ச்சிகட்கு ஊக்கம் பெற்றவர். அடிகள்பால் அளவிறந்த அன்பும் மதிப்பும் பூண்டவர்.

பாவாணர் அறிவுத்திறங்களையும் படைப்புகளையும் தாம் அறிந்த வகையில் கூறிய திருநாவுக்கரசர் அவர்தம் மரபைச் சுட்டிக்காட்டிய வகையும் அதன் முறைகேடுமே பாவாணரைச் சினமுறுத்தி வருந்தி, விரிந்ததோர் கடிதம் எழுத வைத்தது.

மறை திருநாவுக்கரசு பாவணரை நேரில் கண்டு உரையாடி யிருக்கிறார். தம் நூலில் குறிப்பிட்டுள்ள செய்தியையும் சொல்லி யிருக்கிறார். அந்நூல் கழக வழியாக வெளிவந்தது என்று பாவாணர் மாணவர் அருணாச்சலம் என்பார் சொல்லியிருக் கிறார். ஆனால், நூல் கழக வழியே வெளிவந்ததன்று. மறை, திருநாவுக்கரசு அவர்களின் சொந்த வெளியீடே அது. விற்பனை உரிமை கழகத்திற்கு உண்டு. மாணவர் அருணாசலம் சொல்லியே செய்தியைக் கொண்டு, கழகமே மறைலையடிகள் வரலாற்றை வெளியிட்டதாக முடிவு செய்து. அந்நாள் ஆட்சியாளர் திருவசுப்பையா பிள்ளை அவர்களுக்கு ஒரு கண்டனக் கடிதத் எழுதினார். அக்கடிதத்தில் வேறு எவ்வாற்றானும், அவர் தம் குடும்பத்தாரும் அணுக்க நண்பராயினாரும் கூட அறியப்பெறாத செய்திகள்

உள.

7. கொற்றவன்குடி, விரிவுரையாளர் குடியிருப்பு, தென்னார்க்காடு மாவட்டம், 27-10-60.

அன்பரீர், வணக்கம்.

இரண்டொரு நாட்குமுன் திருநாவுக்கரசு இங்கு வந்தது. மறைமலையடிகள் வரலாற்றில் என்னைச் சிறப்பித்து எழுதி யிருப்பதாகவும் ‘அரிசன்’ என்று குறித்திருப்பதாகவும் சொன்னது. அரிசன் என்று யார் சொன்னது என்று கேட்டேன். சங்கரன் கோவிலில் நெடுஞ்செழியன் சொன்னான் என்றது.

நான் அரிசனும்லலேன்; அரசனுமல்லேன்; குலமற்ற தமிழன்.