உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

21. பார்ப்பனர் குலப் பாவாணர்

பாவாணர் எக்குலத்தார்?

அவர் அறைந்து சொல்வார், “குலமற்ற தமிழன்” என்று மேலும் சொன்னால், தமிழன் கண்ட குலமுறை ஒழுங்குப்படி, “நான் அந்தண வகுப்பில் பார்ப்பனர் என்னும் உட்பிரிவினன்” என்பார். அவர் சினந்து எழுதுமாறு ஒரு நிகழ்ச்சி நேர்ந்து விட்டது. அதனால் அவர் தம்மைப்பற்றியும். தம் முன்னோர் பற்றியும் பல செய்திகளை விரிவாக எழுதுகின்றார். அதனைத் தொடுத்து இரண்டு கடிதங்களும் வரைகின்றார்.

தவத்திரு மறைமலையடிகளார் வரலாற்றை அவர்தம் மகனார் மறை. திருநாவுக்கரசு விரிவாக எழுதினார். அந்நூலில் அடிகளாரொடும் தொடர்புடைய புலவர்களையும் குறிப்பிடு கிறார். அவ்வாறு குறிப்பிடுடப்படுபவருள் பாவாணரும் ஒருவர். மற்றையோரைச் சுட்டுவதற்கும் பாவாணரைச் சுட்டுவதற்கும் இருக்கலாம்! ஆனால் இன்னொருபால், பாவாணர் சினங்கொள் வதற்கும், மறுத்து எழுதுவதற்கும் இடமாகிவிட்டது.

நூலில் பாவாணரை மறை திருநாவுக்கரசு என்னதான் எழுதினார்? மறைமலையடிகள் வரலாற்றின் 862 ஆம் பக்கத்தில் எழுதியுள்ள செய்தி வருமாறு:

கழகம்.

“வித்துவான் தேவநேயப் பாவாணர், எம்,ஓ,எல்,

மொழியியல்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்

66

இவர் பழந்தமிழர் (அரிசன்) மரபினர்; திருநெல்வேலிச் சீர்மையினர்; கிறித்துவ சமயம் புக்கவர்; திறமான புலவர். ஏராளமான தமிழ்ச்சொற்களை வடசொற்கள் என்று புலவர் ஏராளமான தமிழ்ச்சொற்களை வடசொற்கள் என்று புலவர் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். வடமொழியினர் பன்னூரு ஆண்டுகளாக அப்படி நமக்கு நம்பிக்கையை ஊட்டிவிட்டனர்.

இந்நிலையில் தமதரிய வடசொற்கள் - தமிழ்ச்சொற்கள் ஆராய்ச்சிகளால் மாற்றிய சிறந்த அறிஞர். தமிழ்-இனநாகரிக