உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

என்றேனும் எங்கேனும் என்னை அரிசன என்று அல்லது எழுதியது உண்டா?

107

சொன்னது

இன்று வழக்கில் இருக்கும் பிறப்புப்பற்றிய குலவேறு பாடுஆரியரால் புகுத்தப்பட்டது. இதைத் தமிழ்மறையாகிய திருக்குறளும் சிவமறையாகிய திருமந்திரமும் கண்டிக்கின்றன மறை மலையடிகளுள், 'சாதிவித்தியாசமும் போலிச் சைவரும்’ என்ற நூலெழுதினார். திருநாவுக்கரசு சேர்ந்துள்ள பேராய (Con- gress)க் கட்சியும் குலமற்ற கூட்டரவை யுண்டுபண்ணுவ தாகச் சொல்கின்றது. தொழில்பற்றிய வகுப்பு வேறுபாடே நாடுகளில் காணப்படுகின்றது. இங்கும் ஆரியர் (பிராமணர்) வருமுன் அப்படித்தான் இருந்தது அம்முறைப்படி நான் அந்தண வகுப்பில் பார்ப்பனர் என்னும் உட்பிரிவினன். ஆயினும், பகுத் தறிவிற்குப் பொருந்தாத ஆயிரத்தெட்டுக் குலங்களாகத் தமிழர் இனம் பிரிந்து சின்ன பின்னமாகச் சிதைந்து வலியற்று ஆரியரா லும் அயலராலும் நலியுண்டு கிடப்பதாலும் மேலும் நலிவுறுத்த இந்தி வந்துகொண்டிருப்பதனாலும் வேற்றுமைகளையெல்லாம் விலக்கித் தமிழரை யெல்லாம் ஒன்றுபடுத்தி மீண்டும் ஒரு நாட்டினமாக (Nations) அமைப்பதே தக்கதாம். தமிழரெல்லாம் ஓரினமென்று வரலாறு மொழி நூல் மாந்தநூல் ஆகிய மூன்றும் ஒருங்கே முழங்குகின்றன. சிவனெறியும் தமிழும் வளர்க் கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இரண்டுக்கும் ஏற்காத மடமைக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இரண்டுக்கும் ஏற்காத மடமைக் கருத்துகளைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பேரால் எங்ஙனம் பரப்பலாம்? இக்காலத்திற்கு இது எள்ளவும் ஏற்குமா?

தமிழன் என்று தலைநிமிர்ந்து மார்தட்டும் வீறும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியார்க்குக் கூட இருந்ததில் லையே. அங்ஙனமிருப்பவும், என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லாருள்ளும் உயர்ந்த

வனாக

(கடிதத்தின் பக்கம் மூன்று)

வர்

என்னைக் கருதுகின்றேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு. அதிலும் தவறு வட ஒருவர் (காந்தி) புனைந்த அரிசன் (ஹரிஜன் மால்மகன் என்னும்) வடசொல்லாற் குறிப்பது. மறைமலையடிகள் வரலாற்றில்