உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

என்னைப்பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை. என் தொண்டை இரண் டோராண்டில் உலகறியும். என்னைப்பற்றிய பகுதியைக் கிழித் தெறிய இயலாவிடின் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவரையும் காரச்சு மையால் மறைத்துவிடுக. இனிமேற் செலவாகும் படிகளாவது திருந்தியிருக்கட்டும். இது எளிதாக இயல்வதே.

‘ஆய்தம்' என்னும் என் கட்டுரைக்கு முன்வரும் என் வரலாற்றுச் சுருக்கத்திலும் நான் சங்கர் நயினார் கோவிலில் (முத்துச்சாமித்தேவர் மகன்) ஞானமுத்தனுக்கும் பரிபூரணம் அம்மையார்க்கும் பத்தாம் மகவும் நாலாம் மகனுமாக 1902ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது' என்னும் ஒரு தொடரை அமைத்துக் கொள்க. என் பிறப்புக் குறித்த பழைய தொடரை நீக்கிவிடுக.

6

என் தந்தையார் இனம் சிறுத்தது. அதனால் அருகி விட்டது. என் தாயார் இனம் பெருத்தது. அதனால் பல ஊர் களிற் பரவியிருக்கின்றது. என் அன்னையாரை மணந்த பின் என் தந்தையார் வழியில் எவ்வகை உறவும் வெளிப்படையாக வைத்துக்கொள்ள முடியாமற் போயிற்று.

என் தந்தையார் 1906 ஆம் ஆண்டிலும் என் அன்னையர் அதன் பின்பும் இறந்து போயினர். என் தந்தையார் உயிரோ டிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறைத்து விட்டதனாலும் அவர் இறந்து அரைநூற்றாண்டிற்கு மேலாகி விட்டதனாலும் அவர் முன்னோரைப்பற்றி இன்று பலர்க்கும் தெரியாது.

என் நூல்கள் எல்லாம் வெளிவந்தபின் என் வரலாற்றை நானே வரைவேன். அதில் என் தந்தையார் வழியை விளக்க மாய்க் குறிப்பிடுவேன்.

என் தாயாரின் முன்னோர் பள்ளக் குடியினராயினும் அவர் தந்தையார் ஓதுவாராகலின் தொழிற்படி அவர் பள்ள ரல்லர் என்பதே என் கருத்து. மேலும் அரிசன் என்பது எனக்கு மிக மிக அருவருப்பான சொல். இதைக்கொண்டு திருநாவுக்கரசு என்னை இறப்ப இழிவுபடுத்தியுள்ளது.