உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

109

(கடிதத்தின் பக்கம் நான்கு)

என் தந்தையாரைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தெரிந்திரா விட்ட ாலும் உண்மைக்கு மாறான, உத்திக்குப் பொருந்தாத தமிழர் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையான- ஆரியரால் புகுத்தப்பட்ட குலமுறையை ஏன் காட்டவேண்டும்? தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவன் என்றோ கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவன் என்றோ குறித்திருக்கலாமே..ஆரியக்குலப் பிரிவினையில் திருநாவுக்கரசுக்கும் நம்பிக்கைதான் போலும். தங்கட்கு இருப்பினும் எனக்கின்மையால் தாங்கள் அச்சிட்டிருப்பதை நான் சொன்னவாறு திருத்திக்கொண்டு இனிமேல் தங்கள் அறியாமைக்கு என்னை ஈடுபடுத்திருக்க. ஆய்தக் கட்டுரை அச்சாகியிருப்பின் மீண்டும் அச்சிடுக.

(ஒப்பம்) ஞா. தேவநேயன்

2-11-60இல் மீண்டும் கடிதம் எழுதினார் பாவாணர்: யான் 28-10-60* அன்று எழுதிய முடங்கலுக்கு ஏன் இன்னும் மறுமொழி யில்லை? அதை எளிதாய்க் கருதற்க. ஆய்தக் கட்டுரையில் இடை இடை சில பகுதிகளைச் சேர்த்தேன். அவற்றிற்கு மெய்ப்பு (Proof) ன்னும் வரவில்லை. அக்கட்டுரைக்கு முன்வரும் என் வரலாற்றுச் சுருக்க முகப்பில் “நான் சங்கரநயினார் கோவிலில் (முத்துசாமித் தேவர் மகன்) ஞானமுத்தனுக்கும் பரிபூரணம் அம்மையார்க்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 7-2-1902 அன்று வள்ளி மாலை 6 மணிக்கும் பிறந்ததாகச் சொல்லப்படு கின்றது” என்னும் தொடரை அமைத்துக்கொள்க.. அல்லாக் கால் கட்டுரையை வெளியிடற்க. ஆயதக் கட்டுரையின் 2ஆம் மெய்ப்பும் வரல் வேண்டும்" என்றார்.

மூன்றாம் கடிதமும் 1-12-60இல் வரைகின்றார். அதில் ஒரு தலைப்பு, ‘என்குலம்' என்பது. அதில். “என்தந்தையார் முதுகுடிப் பிறந்த முத்துசாமித் தேவரின் மகனார் ஞானமுத்தனார். அவர் மறுமணஞ் செய்தபோது கலப்புமணம் செய்துகொண்டார். நான் விடுதலை கண்ட தன்னுரிமைத் தமிழனாகலின் பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினைக் கட்டிற்கு அடங்கியவன் அல்லேன். ஆதலால் குலச்சார்பற்ற முறைப்படி அந்தணர் என்னும் வகுப்பில் பார்ப்பார் என்னும் பிரிவில் ஆசிரியன் என்னும் உட்பிரிவினேன்” என்றெழுதுகிறார்.

"27-10-60 என்பதை நினைவுத்தவற்றால் 28-10-60 என்கிறார்.