உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

111

முடிந்து விட்டதாகலாம்! அன்றிப் பாவாணரே சினந்தணிந்து தம்கருத்தை வலியுறுத்தாமல் விட்டிருக்கலாம்! உணர்வு உந்தப் பட்ட நிலையில் சொல்லியவற்றை நீரிற் கிழித்த வடுப்போல நினைவினின்று அழித்து விடுவதும் அவர்க்கு இயல்பு. எவரோ சொல்லிய ஒன்றைக் கேட்ட அளவிலே சினந்து உரறும் பாவாணர், உண்மை அறிந்த அளவானே நெஞ்சம் உருகித் தம் கருத்தை மாற்றிக்கொள்வதுடன் முற்றாக மறந்துவிடுதலும் யற்கையாம்.

க்கடிதத்தால் அவர்தம் குலக்கருத்தின் புதுமையும், தற்போதுள்ள குலக்கருத்தின் இழிவரவும், ‘குலமற்ற தமிழன்’ என்பதிலுள்ள வீறும் விளக்கமாம்.