உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

22. மனைவி மக்கள்

ரு

மனைவி மக்கள் பிறவித் தொடர்பாளர்; உவப்பினும் காயினும் உறவுரிமை நீங்காது ஒன்றியவர்: அவர்தம் கூட்டால் நடத்தும் இயற்கை உணர்ந்தே இல்வாழ்வை 'இயல்பினால் வாழும் வாழ்க்கை” என்று திட்டப்படுத்தினார் ஆசிரியர் திரு வள்ளுவர். அத்தகைய மனைவி மக்கள் மேல் இயற்கையாகவே பற்றும் உரிமையும் கொண்டிருத்தல் பொதுநியதி. அப்பொது நியதியில் விஞ்சி நிற்கும் புகழ் வாழ்வினரும் உளர். அவருள் ஒருவர் பாவாணர் என்பது நன்கனம் விளங்குகின்றது.

“என் மனைவிக்கு இது 7ம்மீ. ஆகையால் தன் தாயூர்க்குச் செல்கின்றாள். அவள் தங்கை சென்னையில் இருக்கின்றாள். அவளை உதவிக்காக கூட்டிக்கொண்டு வரவேண்டும்

“என் மனைவி கொடுமுடியில் சுகமாயிருக்கிறாள். இது 9ஆம் மாதம். முதற்பேறானபடியால் இம்மாதக் கடைசியில் இருக்கும் பிள்ளைப்பேறு”2

"கொடுமுடிபோய் அங்கு இருவாரம் இருந்து இந்த மீ 4உ என் மனைவியுடனும் குழமகனுடனும் கடவுள் அருளால் இங்கு (மன்னார்குடி) சுகமாய் வந்து சேர்ந்தேன்

"3

‘என்மகன் சென்ற இரண்டு வாரமாய் வயிற்றளைச்சலால் பெரும் பாடுபட்டுப் போனான். இன்று தெய்வத் திருவருளால் சுகமாயினும் பணமுடை பெரிதாய்விட்டது. எந்தக் கணக்கி லேனும் 5ரூ உடனே விடுத்தீர்களாயின் பேருபகாரமாகும். மனம் நன்னிலையில் இல்லை. பணம் அனுப்பினீர்களாயின் உடனே ஓர் தலைசிறந்த கட்டுரை எழுதியனுப்புவேன். சொந்தப்பணத்தை அனுப்பினாலும் சம்பளத்தில் கொடுக்கச்சித்தம். வேறுபட எண்ணற்க

66

224

நூலை அச்சிட்டு முடிந்ததும் எனக்குச் சேரவேண்டிய எஞ்சிய தொகையை மொத்தமாய் அனுப்பிவிடுக. என் மனைவிக்கு மிகத்தேவையானதோர் நகை செய்தல் வேண்டு

1. 18-8-31 (621.&.) 3.7-1-32 (வ.சு.)

5. 23-10-34 (வ.சு.)

2. 12-10-31 (வ.சு.)

4. 11-1-33 (வ.சு.)

995