உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

113

எனது அத்தான் கொடுமுடியில் இறந்துபோனார். இதை நண்பர் நாயுடுவிற்குத் தெரிவிக்கவும்

996

“என் அக்காளின் இளைய மகளும் என் மனைவியின் தங்கையுமாகிய நீலாம்பாள் என்னும் 18 ஆண்டுப் பெண்பிள்ளை சென்ற வாரம் முழுதும் கடு நோயாய்க் கிடந்து நேற்றுக்காலை இறந்து போனதால் எழுத்து வேலை சிறிதும் நடைபெறவில்லை. இன்னும் ஆற்றொணாத் துயரம். இரண்டொரு நாளுக்குப் பின்னே கட்டுரை விளக்கம் வரும்”

997

“என் கொழுந்தியார், இறந்தது மிக எளிதான காரியமன்று. என் அக்காள் குடும்பப்பொறையே என்மேல் விழுந்ததினால் பல ஒழுங்குகள் செய்யவேண்யிருந்தது. பின்பு என் கைக் குழந்தை நோய்வாய்ப்பட்டு இன்னும் முழுச்சுகமும் பெற வில்லை. இதனால் எனக்கு ஓய்வில்லாதிருந்தது'

998

"என் முந்திய கடிதங்களெல்லாம் உங்களை ஏமாற்றித் தானிருக்கும், ஆனால் என் செய்வது? ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் அடுக்கி வருமானால் சொன்னபடி செய்ய முடிய வில்லை. என் கைக்குழந்தைக்கு இன்னும் நலமாகவில்லை. நாள்தோறும் மருத்துவம்தான். நான் கவனிக்காவிட்டால் வேறு ஆளில்லை. நாளிற் பெரும் பகுதி அதிலேயே செலவா கிறது. ஆனாலும் இது விடுமுறைக் காலமாதலால் இயன்றவரை எழுதி வருகிறேன், வியாச விளக்கம் மிகத்திருந்திய முறையில் ன்னும் இரண்டொரு நாளில் உங்கள் கைக்கு வந்து சேரும். கவலற்க. என் அக்காள் மகன் இங்கே படிக்கிறவன் விளை யாட்டில் வலது கை எலும்பு முறிந்து நாள்தோறும் சிகிச்சை செய்யப்படுகிறான்.

“இன்றுதான் உளம் அமைதியடைந்தது. குழந்தை நலமாகி விட்டது. பையனுக்கு முறிந்த முறிவும் கூடிவிட்டது. ஆனாலும், நீங்கள் குறிக்கும் காலம் மிகக் குறுகியதாகியிருப்பதால் லக்கண நூல்களை இவ்வாண்டே இவ்வாண்டே ஒப்புக்கொள்விற்கு அனுப்புமாறு எழுதவியலாது. அடுத்த ஆண்டிற்குப் பயன்படு மாறு எழுதவேண்டுமாயின் எழுதுகிறேன்”10

“என் அருமைக் குழமகன் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் முந்தாநாள் (24-12-39) ஞாயிறு காலை 8 மணிக்கு மீளாவுலகம்

6. 4-11-38 (621..)

7. 21-8-39 (வ.சு.)

8. 11-9-39 (621.5.)

9. 20-9-39 (வ.சு.)

10. 7-10-39 (வ.சு.)