உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

-

புகுந்துவிட்டான். இவ்வருத்தம் என் வாழ்நாளெல்லாம் நீடும். சென்ற ஒரு மாதமாய் நோய் கொடிதாய் இருந்தமையின் என்னால் வேறு வேலை ஒன்றும் செய்ததற்கில்லை.'

2211

“என் மகன் திருமணம் இன்னும் நாட்குறிப்பிடப் பட வில்லை. ஆயின் அடுத்த மாதமாதலால் இன்றிருந்தே முன்னேற்பாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு உடுப்பே 300 உரூபாவிற்கு மேற்பட்டுவிடும். அதைச் சென்னை யிலேதான் வாங்கலமென்றிருக்கிறேன். என் மகனுக்கு ஒரு கைக் கடியாரமும் வாங்கவேண்டியிருக்கின்றது. எத்தனை சிக்கனமாக முடிப்பினும் திருமணச் செலவு ஆயிரம் ரூபாவிற்கு இழுத்துவிடும்.”12

“என் மகன் நம்பிக்கு ஆவணி 3 ஆம் நாள் 19-8-57 கோயிலில் திருமணம். அழைப்பிதழ் அச்சாகின்றது. காரிக்கிழமை (சனிக் கிழமை) விடுப்பேன்.

13

என் மனைவியார் அகுத்தோபர் 27 ஆம் பக்கல் (தேதி) இறந்தார். அன்று மருத்துவச் சாலைக்கு வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் 10 உரூபா இல்லாதிருந்தது. அனுப்பி யிருந்தால் பிழைத்திருப்பார்.

நானும் என் ம னைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம்..அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. "பல்சான்றீரே பல் சான்றீரே” என்னும் புறச் செய்யுளை நோக்கினால் என் கூற்று விளங்கும். காதல் பெண்பாற்கு மட்டும் உரியதன்று. முக்கடமைகளை நிறைவேற்றவே இன்று உயி ரோடிருக்கின்றேன். அவற்றுள் ஒன்று வடமொழியினின்று தமிழை மீட்டல்.4

ஈருடலுமாக

யானும் என் ம னவியும் ஓருயிரும் ஈரு இருந்தோம்..இன்று என் நிலைமை எங்ஙனமிருக்கும் என்று உய்த்துணர்ந்து கொள்க. மணமாகாத என் இருமக்கட்காகவே உடல் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.15

என் ஆருயிர் மனைவியார் பிரிவுத் துன்பம் ஆற்றொண ததும் தாங்கொணாததும் ஆதலின், இன்னும் மூன்றாண்டிற்கு மேல் ருக்க விருப்பமில்லை. அதற்குள், தமிழ் வடமொழியி

னின்று மீட்கப்பட்டுவிடும்.6

11.26-12-39 (வ.சு.)

12. 19-1-57 (வ.சு.)

13.9-8-57 (வ.சு.)

14. 11 சுறவம் 1995 (வி.பொ.ப.)

15. 26-11-63 (வி.அ.க.)

16. 20 கும்பம் 1195 (வி.பொப.)