உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

115

என் மனைவியார் இறந்த அன்றே என் உலக வாழ்க்கை முடிந்தது. மூன்று கடமைகளை நிறைவேற்றத்தான் இன்னும் மூவாண்டு உடலோடிருப்பேன். அவற்றுள் அவற்றுள் மொழியினின்று தமிழை மீட்டல். 17

ஒன்று

வட

இறைவன் அருளால் என் மகளுக்குத் திருமண ஏற்பாடு உறுதியாகியுள்ளது. திருமணம் 19-4-65; இட டம் சென்னை.

மணவாளப் பிள்ளை பள்ளியிறுதி தேறியவர், எண்ணூரில் உள்ள இயங்கித் தொழிற்சாலையில் கணக்கர். என் மகளுக்குத் துணை வேண்டியிருப்பதாலும், என் நூல் வெளியீட்டிற்குச் சென்னையே தலைசிறந்த இடமாகையாலும், நான் குடி யிருக்கும் வீட்டுக்காரர் மேமீ வீட்டைவிடச் சொல்வதாலும் எனக்கு யாதொரு பற்றுமின்மையாலும், எண்ணூரி லேனும் திருவொற்றியூரிலேனும் வீடு பார்க்கச் சொல்லி விட்டேன். ஆதலால் அன்பு கூர்ந்து திருநகரில் வீடுபார்க்கும் முயற்சியை விட்டுவிடுக.18

ங்கு

என் முதல் மனைவியார் இறந்தபின் ஓராட்டைக் குழந்தையாயிருந்தவனை என் சின்னண்ணார் தமக்குப் பிள்ளை யில்லையென்று தெத்துப் பிள்ளையாக எழுதிக் கொடுத்து எடுத்துக்கொண்டார். பதினெண்ணாட்டைப் பருவத்தில் னவியபோதும் அவரே தந்தையாரென்றும் என் மக்கள் அவனுடன் பிறந்தாரல்ல ரென்றும் கூறி மீண்டும் உறவு கூடும் வாய்ப்பையும் இழந்து விட்டான். அதனால் குழந்தைப் பருவத்தி னின்றே அவனுக்கு (மணவாள தாசனுக்கு) என்னொடு தொடர்பு இல்லாது போயிற்று. அவனை மகனென்று அதன் பின் நான் கருதவுமில்லை."

‘தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்’

என்பது தமிழ்ப் பொதுமறை. என் கோட்பாடுங் கொள்கையும் என்னதென்றும்., அதனால் நான் பட்டபாடும் கெட்டகேடும் தங்கட்கு நன்றாகத் தெரியும். எனக்கு அவனொடு தொடர்பு இல்லையென்றும், அவன் கொள்கையில் அக்கறை கொள்ள வில்லையென்றும் நன்றாகத் தெரிந்திருந்தும், என்னை அவனொடு தொடர்புபடுத்தி என் பெயரைக் கெடுத்துள்ளீர்கள்.

17. 27-1-64

19. 31-12-69 (வி.அ.க.)

18.29-3-65 (வி.அ.க.)