உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

117

23. மகளார்க்காக வாங்கிய மான்குட்டி

பாவாணர் தம் மகளார் மகிழ்வுக்காகவும் மனநிறைவுக் காகவும் மான்குட்டி வாங்கி வளர்த்தார் வளர்த்தார் என்பது கடித வழியாகத் தெரிந்து கொள்ளும் செய்தியாகும்.

"" 1

66

பாவாணர்க்கு அணுக்கராகவும் ஆர்வத் தொண்டராகவும் இருந்தவருள் ஒருவர் சேலம் அரிமாப் புலவர் திரு. சின்னாண் L டார். அவருக்கு 29.6.64இல் எழுதிய கடிதத்தில், ஏத்தாப் பூரிலாவது ஆற்றூரிலாவது புள்ளிமான் குட்டி விலைக்குக் கிடைக்குமா?” என்று வினவுகிறார். தாமும் பிற வகைகளாலும் மான்குட்டி வாங்கும் முயற்சியை மேற்கொள்கிறார். பின்னர், “மான்குட்டி ஆரூர்ப் பக்கத்தில் இருக்கிறது. ஆதலால் அங்குப் பார்க்க வேண்டாம். என்னும் பாவாணர், புள்ளிமான் கலைக்குட்டி ஒன்றை விலைக்கு வாங்குகின்றார். வாங்க நேர்ந்த நிலை வாங்கிய வகை, கொணர்ந்த திறம் இவற்றையெல்லாம் 25.7.64இல் எழுதுகிறார். ஒரு குட்டி மறுகுட்டியைத் தேடித் திரியும் வேட்கையைக் கிளப்பியதையும் அக்கடிதத்தில் அறிந்து காள்ள முடிகின்றது சேலத்திலிருந்து அரூர் வந்து அன்று இருபுலவருடன் கோட்டப்பட்டி சென்று இராத் தங்கி மறு நாட்காலையில் புள்ளிமான் கலைக்குட்டி 100 உரூபாவிற்கு வாங்கிக் கொண்டு அரூர் திரும்பினோம். அன்னையார் இறந்ததி னாலும் இன்னும் மணமாகாமையாலும் வேறு துணை யின்மையாலும் மகள் ஆறுதலடைதற் பொருட்டே, அவள் அவாவியவாறு அத்துணை விலைகொடுத்த அதனை வாங்க நேர்ந்தது. மேலும் அவளுக்குரிய வீணையை 150 உரூபாவிற்கு விற்றுத்தான் அதனை வாங்கினோம். குட்டி இற்றை நிலைமையில் அவ்விலை பெறும். ஆயினும் 50 உரூபாவிற்கும் வேறிடத்தில்

வாங்கலாம்.

66

குட்டியைப் பேரியங்கியில் ஒருவரும் ஏற்ற சை யாமையால் மொரப்பூர் சென்று புகைவண்டியில் ஏற்ற விரும்பினோம். ஆயின் குட்டி புதிய ஆட்களைக் கண்டு மருண்டு 1. கடிதம் 2.9.64.