உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

ல்

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

முரண்டு பண்ணியதால், புகைவண்டிக் கூண்டில் அடைப்பது சேதத்திற்கிடமாம் என்று ஒருவர் தவறாய்ச் சொல்லிவிட்டார். அதை நம்பி தி.வி.எசு. வில் (T.V.S) அனுப்புமாறு சீநிவாசன் இராசேந்திரன் என்னும் இரு புலவரிடமும் சொல்லிவிட்டு இங்கு வந்தேன். தி.வி.எசு. வில் உயிரிகளைக் கடத்துவது ல்லையென்று அறிந்ததினாலும் என் மகள் உடனே கொண்டு வர விரும்பியதாலும் மறுநாளே அரூர்சென்று அடுத்த நாட் காலை அவ்விரு புலவருடனும் ஒரு மாணவருடனும் மொரப்பூர் கொண்டுபோய் நண்பகல் இணைப்பு விரைவானில் (Link Ex- press) ஏற்றிவிட்டோம். மாணவர் என்னுடன் இங்குத் துணைக்கு வந்து திரும்பினார்.

மான் நன்றாய்ப் பழகியிருக்கின்றது. ஆயின், ஒரு புள்ளி மான் பிணைக்குட்டி வேண்டும். இல்லாக்கால், கலைக்குட்டி பெரிதானவுடன் மலை நாடலாம். உடனே தாங்கள் ஏத்தாப்பூர் நண்பருக்கெழுதிக் கேட்க. ஆற்றூர்ச் சந்தைக்கு மான்குட்டி விற்பனைக்கு வருமென்று சேலத்திலிருந்தபோது கேள்விப் பட்டேன். அங்கு வராவிடினும் அப்பாக்கம் யாரும் வளர்த்து விற்கலாம். மும்மாதக் குட்டியாயிருப்து நல்லது. ஆறு மாத மாயினும் குற்றமின்று. 25 முதல் 50 உரூபாவரை தரலாம். அரூர்ப்பக்கம் இப்போது ஒருவரிடத்துமில்லை” என்றெழுதி

னார்.

புள்ளிமான் பிணைக்குட்டி ஒன்று வேண்டும் என்னும் எண்ணம் பாவாணர்க்கு ஏன் எழுந்தது? ஏனெனில், கலைக்குட்டி யன்றோ வாங்கியுள்ளார்! கலைக்குட்டி பெரியதானவுடன் பிணைதேடிமலை நாடலாம் என்பது அவர் எண்ணமாயிற்றே! ஆதலால், பிணை மான்குட்டி தேடும் வேட்டம் அடுத்த எழுந்தது.

அதனால் அன்பர்களுக்குத் தம் ஆர்வத்தை எழுதினார். திரு.மி.மு.சி. அவர்களுக்கு 7-10-64ஆம் நாளிட்ட கடிதத்தில் தமக்குப், “புள்ளிமான் பிணைக்குட்டி கிடைத்தவுடன் தெரி விக்க” என்றெழுதினார்.

“புள்ளிமான் பிணைக்குட்டி கிடைத்ததா?” என மீண்டும்

24-11-64இல் வினவினார்.

பினைமான்குட்டி, இணைசேர்க்கும் வண்ணம் கிடைத்திலது! அதனால், கலைக்குட்டி மலைநாடுமுன் அதனை விற்றுவிட வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்றுப் போலும்! ஆத லால், தழிழ்ப்பாவை ஆசிரியர் திரு. அருளர் (கருணை)க்கு