உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

119

5-12-64இல் “என்னிடம் ஒரு புள்ளிமான் கலை இருக்கின்றது. அதை 150 அல்லது 100 உரூபாவிற்கு வாங்குவார் யாரேனும் ஆங்கு (மதுரையில்) உண்டா?” என்று கேட்டு எழுதினார்.

அவர் விரும்பிய வண்ணம் பிணைக்குட்டி கிடைத்ததோ? கலைக்குட்டி விற்கப்பட்டதோ? கிடைத்த கடிதங்களில் அதற்கு மேல் செய்தி கிடைக்கவில்லை.

ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவின் உறையுளாகத் திகழ்ந்த பாவாணர் அன்புள்ளம் ஒரு மானைத் தேடிக் கொணர்கின்றது; அருளுள்ளும் விடுதலை தர முனைகின்றது! எதிர்பார்க்க இயலாத முரண் இயல்புகள் இவை!

வேர்ச்சொல்லாய்விலேயே வேளையை யெல்லாம் செல விடும் ஈடுபாட்டாளர் பாவாணர்! பண்ணிசைத்துப் பாடவும் கருவி கொண்டு இயக்கவும் கற்று இசைத் துறையிலும் இடம் பெற்றிருந்தார். இசைத் துறையில் பணியாற்றவும் வேட்கை கொண்டு இருந்தார்! எதிர்பார்க்க இயலாத முரண் இயல்புகள்

வை!

ம்

உள்ளொத்த நேயம் ஒன்றிருந்தால் முரணும் அரணாம் என்பது தெளிவாம்! நேயத்தின் முன்னே முரணென்னே! அரணென்னே!