உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

24. நோய், நொடி, நொம்பலம்

நோய் நொடி என்னும் இணைமொழியுள், நோவு தரும் பிணி வகைகளை நோய் என்றும், வறுமைக் குழியுள் தள்ளும் இன்மையை நொடி என்றும் சுட்டியமை தெளிவு. (நொம்பலம்: துன்பம்) பாவாணர்க்கு இவ் விருவகை இடர்களும் என்றும் இருந்தன. வளமையில் பிறந்தாரல்லர் பாவாணர்: வளமையில் வளர்ந்தாரும் அல்லர்: வளமையில் வாழ்ந்தாரும் அல்லர்; இயல்பான உடல் நோயொடு பருவ வேறுபாட்டு நோயும் அவரைப் பற்றிப் பதைப்பூட்டின! வல்லாங்கு வாட்டும் வறுமை யூடு, பொல்லாங்கு உரைப்பார் புன்மையும் நாளும் பொழுதும் புன்முறுவல் பூத்து நின்றன! அவர்அஞ்சாத அடலேறாய், நிலைதிரியா மலையாய் நின்றாலும் நெஞ்சம் ஓரொருகால் கனன்று நெகிழ்ந்துரைக்கவும் அவை செய்தன. அவ்வாறு வெளிப்பட்ட செய்திகளுள் சில வருமாறு: இவை காலவகை அடைவால், பொருள்முறை ஒழுங்கு திரிந்து கிடப்பனவாம்.

66

ங்கே நான் எள்ளளவும் எதிர்பாராத ஓர் இடர்பாடு, எனக்கு நேர்ந்துள்ளது. பஞ்சாபிகேசையர் (பி.ஏ.,எல்.டி.,) என்பவர் ஒருவர். இதுகாறும் கால அட்டவணை மட்டும் வரைந்து வந்தவர்: காலேஜ் கணக்காசிரியர் இன்று துரையின் இளைக்காரத்தின் நிமித்தம் பல்வகையில் தலையிட்டு நான் உங்களிடம் ஏதோ பணம் பெற்றுக்கொண்டு உங்கள் வெளியீட்டு நூல்களை வைத்திருப்பதாகத் துரையிடம் பொய் ம் சொல்லிவிட்டார். துரையும் சிறிதும் மூளையின்மையின் நம்பிக்கொண்டார். இதனால் வகுப்புப் பாடப் புத்தகங்களை நியமிக்க ஒரு கூட்டம் கூடிற்று, பாடப்புத்தகப் பட்டியல் வையகத்துறக்கத்தை 3ஆம் பாரத்திற்கும் பொன் கதைக் கொத்தை 5ஆம் வகுப்பிற்கும் (Fifth Class) குறித்திருந்தேன். Pri- mary department Non-Detail Co GOT IT OLD GOT MI QUIT GOT கதைக் கொத்து நீக்கப்பட்டது. ஆங்கில வழக்குகள்(English Idi- oms) உள்ள மொழிபெயர்ப்பு நூலென்று வையகத் துறக்கம் முதலில் நீக்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் காரணம் க்ஷ ஐயர். அவரே இங்ஙனம் குறை கூறித் தள்ளுமாறு சிலரைத் தூண்டி யவர். துரையும் அவ் ஐயர் வயப்பட்டு அவர் ஆணைவழி

பான்