உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

121

நிற்கிறார். ஆகையால் என்னால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஒருக்காலும் ஓரிடத்தும் இல்லாத புதுமாதிரியாய் நிகழ்ந் திருக்கிறது. இன்னோர் இடப்பாடும் எனக்கு நேர்ந்திருக்கிறது. அதைப்பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுவேன். வேலைக்கு மட்டும் கேடில்லை. பண்டிதர்க்குரிய உரிமையும் அதிகாரமும் எடுபட்டன.

நான் சென்ற வாரமே வேலையை விடுவதற்கிருந்தேன். ஆனால் ஒரு பயனோக்கி இவ்வாண்டு முழுவதும் இங்கிருக்கத் துணிந்தேன். விடுமுறைக்கு முன்பு க்ஷ ஐயர் தமிழ் நூல் நியமுகத்தில் தமக்குத் தலைமை உரிமை இருக்க விரும்பினார். நான் சிறிதும் இடம் கொடுத்திலேன். இதுவே இத்துணை இடர்க்கும் காரணம். துரைக்குக் கலாசாலையை நடத்தும் திறமையில்லை. அதனாற்றான் எல்லாவற்றையும் க்ஷ ஐயர் வசம் விட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு காலம் வரும். அதற்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறேன்

997

“வாணியம்பாடி இஸ்லாமிய காலேஜுக்கு ஒரு வித்துவான் வேண்டுமென்று விடுமுறையில் ஓர் விளம்பரம் இந்துப் பத்திரிகையில் கண்டேன். அது இம்மாதம் 19ஆம் உ வரை இருந்தது. இங்ஙனம் நேருமென்று எண்ணவேயில்லை. இன்றேல் விண்ணப்பித்திருப்பேன். எல்லாம் இறைவன்

அன்றே

செயல்.”2

66

இந்த ந்த வாரம் எனக்குக் கொஞ்சமேனும் ஊக்கம் கிடையாது; எனக்கு இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் ஆகிவிட்ட ன என்று காலத்தைக் கணக்கிடத் தொடங்கி

99

3

விட்டார் பாவாணர்.3

“உலகம் அழுக்காறு நிறைந்தது” என்று அடுத்த சில நாள்களில் எழுதுகின்றார்.4

இந்த மன அடிகளுக்கு இடையே வறுமையும் சேர்ந்து கொண்டது; அஃதவர்க்கு என்றுதான் இல்லை!

இம்மாதம் 15 ஆம் வுக்குள் 10 ரூ அனுப்பமுடியுமானால் அனுப்புக. கடன் கழுத்தை நெருக்குகிறது. இன்னும் 3 மாதத் திற்குள் என் 100 ரூக் கடனையும் தொலைப்பீர்களாயின் அதுவே எனக்குப் பேருபகாரமாக இருக்கும்

1. 1=7-31(வ.சு)

3. 18-7-31 (வ.சு.)

995

2. 1-7-31 (வ.சு.)

4. 29-7-31 (வ.சு.)

5. 10-7-31 (வ.சு.)