உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

“எனக்குப் பணவுதவி பணவுதவி இன்றியமையாததேனும் நூல்

வெளியீடே மிகவும் ஊக்குவதாய் இருக்கும். ஆகையால் உடனே இலக்கணத்தையும் இதையும் (இக்கதையையும்) அச்சிடுக

996

"இப்போது 20உக்குள் தயவுசெய்து 10ரூ அனுப்பி உதவுக. பணத்திற்கு பெரிய முடை. தாட்செலவுக்கும் தபாற்செலவுக்கும் கூடப் பணமில்லை. என் கடன் தொலைந்துவிட்டால் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்”7

"பலவிதத்தில் எண்ணிப் பார்க்கையில் இன்னும் இரண்டோராண்டு இங்கே கழிக்கலாமென்றேயிருந்தேன். ஆனாலும் இந்தக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். 55 ரூ. கேட்டிருக்கிறேன். அக்கல்லூரி முதன்மைபற்றிக் காஞ்சித் திணையிலுள்ளது என்ற செய்தி எனக்கெட்டுகிறது: இனிமேல் வெளியேறிச் செல்வதாயின் 55 ரூபாய்க்குக் குறையாதிருக்க வேண்டும். அடுத்த ஆண்டில் பரீட்சைக்கு விண்ணப்பம் செய் வேன். பரீட்சை தேறினபின் குறை வாராது. 8

“யான் ங்கு (திருச்சி) ச்சி) வந்ததும் சொல்லாதிகார வேலையைத்தான் தொடங்கினேன். ஆனால் வெயில் கடுத்து வெக்கை மிகுந்ததினால் நிறுத்திவிட்டேன். இதுவரை எதுவும் செய்ய இயலவில்லை. படிக்க விரும்பியதைப் படிக்கவுமில்லை. சேலம் கட்டுரையைத் தொடங்கவுமில்லை. சும்மா இருப்பதுகூட வேதனையாயிருந்தது. இன்றுதான் சற்றுத் தணிந்திருந்தது. எப்படியாவது 14ஆம் உயான் அங்கு வருமுன் முடித்துக் கொண்டு வருகிறேன்.

999

உங்களுக்கு நண்பர் இ.மா. அவர்கட்கும் என்மீதுள்ள பற்றி னால் 65 ரூபாயானாலும் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். தற்போது அங்கு வருவதால் ஏற்படும் வசதிக்குறைவும் முட்டுப் பாடும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது 10ரூ கொடுத்து வசதியான வீட்டிலிருக்கிறேன். அங்கு இத்தகைய வீட்டிற்கு 25ரூ கொடுக்க வேண்டும். சிறுவீட்டில் என் பொருள்கள் அடங்கா. அரிசித் திண்டாட்டம் நினைப்பினும் வருத்துகின்றது. பையன்கள் பல பள்ளிகளில் அமர்ந்து படிக்கிறார்கள். அங்கு வந்தால் புதுப்புத்தகம் வாங்கிப் புதுப்படிப்புத் தொடங்க வேண்டும். இங்கு வாங்கிய புத்தகம் வீண். தவணையிடையில் டமாறினால் தவணைச் சம்பளம் கட்ட நேரும். என் மருமகன்

6.23-7-31 (வ.சு.)

8. 23-10-31 (வ.சு.)

7. 14-2-31 (வ.சு.)

9. 31-5-44 (வ.சு.)