உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

123

ஒருவன் இங்கு 5ஆம் பாரத்தில் இலவசமாய்ப் படிக்கிறான்: அங்கு வந்தால் இது நீங்கும். தற்போது புகைவண்டியில் ஓர் ஆடவனுக்கே இடமில்லை. குடும்பத்தோடும் கைக்குழந்தை யோடும் வர எங்ஙனம் இயலும்? இங்குள்ள நண்பர்கள் போக வேண்டாமென்று தடுக்கிறார்கள்.. உயர்நிலைப் பள்ளிதானே என்றும் அங்கத்து 70 ரூ இங்கத்து 50ரூ என்றும் சொல்கிறார்கள். அது உண்மைதானே! எனக்குச் சென்னைக்கு வர விருப்பம்தாம். ஆனால் விலைமிகுந்தும் பொருள் கிடையாத காலத்தில் எப்படிக்குடும்பத்தோடு வரமுடியும்? என்றாலும், தாங்கள் விருப்பத்திற்கிசைந்து மேலாளர் வாயிலாய் இன்றை அஞ்ச லுக்கு விண்ணப்பம் விடுத்துவிட்டேன் 70ரூபாய்க்கு குறையாது பார்க்க. முக்கியமான வேலையிலேயே போதிய வருமானம் வரவேண்டும். பிற முயற்சியும் செய்து பிழைப்பது நன்றன்று. குறிப்பு : தற்போது 5க்குள் ஓர் அறை பார்க்க. எதிர்க்கடையில் சாப்பிடலாம்.’ 9910

66

‘அமர்த்தாணை வந்தவுடன் சம்பளம் இங்குள்ளதுதானே என்றார்கள். பின்பு முத்தையால்பேட்டைப் பள்ளியில் உயர்ந்த சம்பளத் திட்டம் போடுவார்கள் அதன்படி கொடுக்க மாட்டார்கள் என்றார்கள். பின்பு 3 மாத அறிவிப்பாவது 3 மாத சம்பளமாவது கொடுக்கவேண்டும் என்றார்கள். இவர்கள் சொல்கிற சம்பளத்திற்கு உடனே ஆள் கிடைக்கவில்லை, ஆகையால் இராமராவ் என்னும் சின்னப்பண்டிதரையே பெரிய பண்டிதராக்கச் சொல்லியிருக்கிறேன். அவரும் போகிறதாக அறிவிப்புக் கொடுத்திருக்கிறதினாலே 50 ரூ கொடுத்தால் ரூ ருக்கிறேன் என்கிறார். மேலாளர் 48 வரை வந்திருக்கிறார். ன்னும் 2 கூட்ட வேண்டுமென்று சின்னவர் சொல்கிறார். அவரது பழைய சம்பளம் 40. இம்மாத இறுதிக்குள் ஏதேனும் ஒழுங்காகும். வருகிற வெள்ளியிரவு புறப்படலாமென்றிருக் கிறேன். துணி ஒரு பெட்டியும் முக்கியமான புத்தகம் ஒரு பெட்டியுமாக இரு பெட்டிகள் கொணர்வேன்.!"

2

"போன சூலை வேலைக்கு ரூ. 25 நாயுடுவிடம் பெற்றுக்

காண்டேன்.

“சென்ற ஆண்டு சென்னை வேலையை ஒப்புக் கொண்ட தால் 2 நிலைப்பேழைகளையும் சில அரிய நாற்காலிகளையும் விற்றுவிட்டேன். இன்று அத்தகைய வாங்க முடியவில்லை.

10.16-7-43 (வ.சு.)

11. 24-7-43 (வ.சு.)