உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

66

ங்கு வந்தவுடனே (சேலம்) தலைவர் அவர்களிடம் ரூ. 30 கடன் வாங்கி 16 உடல் நலத் தகுதித்தாளுக்கும் 4 செருப்புக்கும் 3/2 மேலாடைக்கும் செலவாய்விட்டது.12

66

“திரு. சேதுப்பிள்ளை அவர்கட்குத் தலைமைப் பதவி கிடைத்துவிட்டதாகக் கேள்வி. இரண்டாவது வேலைக்கு முயற்சி செய்ய வேண்டுமே! அதுவும் இன்னே செய்யவும் வேண்டுமே! எனக்குக் கிடைப்பின் என்நிலை உயர்வோடு தமிழ்நிலையும் உயரும் என்பதற்குத் தடையில்லை. ஆயின் ஒவ்வொருவரும் இவ்வாறே நினைக்கலாம்.13

66

"தற்போது இங்கு வெப்பம் அளவிறந்திருப்பதால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. சும்மாவிருந்தாலும் பகல் 10 மணி முதல் 6 மணி வரை தலை வலிக்கிறது. மழை பெய்யா விடின் 20ஆம் உ வரை இங்ஙனம்தானிருக்கம். நான் குடியிருக்கும் வீட்டுக்கு முகடு கள்ளிக்கோட்டை ஓடு போட்டது. மிகத் தாழ்வானது. அதனால் வெப்பத்தை மும்மடங்கு மிகுக்கின்றது. கடிதம் எழுதுவது கூட வருத்தமாயிருக்கிறது. காலை 8 மணி வரைதான் ஏதேனும் செய்யமுடியும். அன்று வினைசெய்யின் தலை வலிக்கின்றது. தண்ணீர்ப் பஞ்சத்தையோ சொல்ல வேண்டியதில்லை.4

சென்ற ஒரு மாத காலமாக ஒரு கடும் பல்லவி என்னை வருத்தி வருகின்றது. இன்று சற்று மட்டு. ஆயினும் தீர்ந்த பாடில்லை. சிறந்த பல் மருத்துவரெல்லாம் பல்லிற்குப் பொறித் துலக்கம் செய்ய வேண்டுமென்றனர். இதற்கிசையவில்லை.”15

நான் தமிழ் கற்ற அளவு ஆங்கிலம் கற்றிருந்தால் எருதந் துறையில் (Oxford) தலைமைப் பேராசிரியனாகியிருப்பேன். தமிழால் நான் பட்டபாடும் கெட்டகேடும் கொஞ்ச நஞ்சமல்ல. இறுதியில் என் உயிருக்குயிரான காதற் கற்பரசியை இழந்தேன். தலைக்கு மிஞ்சின தண்டனை இல்லை. நீர்ச்சீலைக்கு மிஞ்சின நிரப்பில்லை.

இன்னும் மூவாண்டுதான் உயிரோடிருப்பேன்.16

சய்து

அடுத்த மாதம் முதற்கிழமை இங்குள்ள கண் மருத்துவ விடுதியிற் கண் புரைக்கு அறுவை மருத்துவம் கொள்வேன். விடுதியிலேயே இரு கிழமைகள் இருக்க நேரும்.7

12.3-8-44 (வ.சு.)

14. 16-5-50 (வ.சு.)

16.12-2-64 (வி.அ.க.)

3. 3-10-46 (வ.சு.) 15. 18-7-50 (வ.சு.)

17.24-11-64 (மி.மு.சி.)