உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

125

என் மனைவியார் இறந்ததை எண்ணி வருந்தியதால் இன்று நெஞ்சாங்குலை ஈளை நோய் என்னைத் தாக்கியது. ஆதலால் முன்போல் இனிச் சொற்பொழிவிற்கு வெளியேற முடியாது.*

18

ப் பனிக்கால முழுதும் ஈளை நோய் என்னைத் தாக்கும் போலும்! கண் மருத்துவம் 2.1.65 அன்று நடக்கும்.

19

எனக்கு இடக்கண் அறுவையாகிச் சிறிது சிறிதாய் நலம் பெற்றுவருகிறேன்.

20

நான் கண்ணாடி வாங்கியிருப்பினும் மிகுதியாகப் பயன் படுத்துவதற்கில்லை. கண் துளி மருந்து இன்னும் மும்மாதம் தொடரும். அதன்பின் இடக்கண் முழுநலம் பெறும். இதைக் கண்ணாடியின்றியே அரைப் பார்வையில் எழுதுகின்றேன்.2

21

திரு.எசு.கே. வேலாயுதம் ஆசிரியர் நன்கொடை 422 உரூபா வந்து சேர்ந்தது. இது, இறைவன் திருவருள் என்றே கருது கின்றேன். இந்நிலைமை மூவாண்டிற்கு முன்னிருந்திருந்தால் என் ஆருயிர் மனைவியார் இறந்தேயிருக்க மாட்டார்.

மாதம் ஆயிரத்தைந்தாறு உரூபா வாங்க வேண்டிய நான் வேலையில்லாதிருக்கிறேன்.

அளவிறந்த அழுக்காறும் தந்நலமும் தமிழையும் என்னையும் கெடுக்கின்றன. பண்டைத் தமிழ்ப் புலவர் பரிசில் வாழ்க்கையன் ஆனேன்.22

ஒரு கிழமையாக எனக்கு நெஞ்சுச் சளிக் காய்ச்சல். இன்று ஓரளவு நலம். நோய்நிலையில்தான் புத்தனாம்பட்டி சென்று வந்தேன். 2055 உரூபா கொடுத்தார்கள். திருக்குறள் மரபுரை வெளியிடுவதாகச் சொன்னேன். அதற்கு 4000 உரூபாவிற்கு மேற் செல்லும்.23

எனக்கு ஒரு கட்டியிருப்பதால் இம்மாத இறுதிக்குள் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருக்கிறது. சென்னையில் தான் செய்துகொள்ள வேண்டும். முந்நூறு உரூபாவிற்குக் குறையாது செல்லும்.

18. 1-12-64 (மி.மு.சி.) 20.22-6-66 (மி.மு.சி.) 22.13-12-66 (மி.மு.சி.)

19. 30-12-64 (மி.மு.சி.) 21. 27-7-66 (மி.மு.சி.)

23.15 துலை 1999 (மி.மு.சி.)