உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சென்னையில் 120 உரூபாவிற்குக் குறைந்து எனக்கேற்ற வீடில்லை. இங்குக் கட்டும் வாடகை 55 உரூபா. இதற்குமேல் என்னாற் கொடுக்க இயலாது. ஆதலால் இங்கேயே இன்னும் பல்லாண்டிருக்கத் தீர்மானித்துவிட்டேன்.24

முதுவேனிலிற் சிறப்பாகத் தீ நாட்களைக் கழிப்பது ஆண்டு தோறும் பெரும்பாடாக இருக்கிறது.

25

உட்சட்டை ஒன்றுகூடக் குப்பாயமின்றி அணியக்கூடிய நன்னிலையில் இல்லை.

26

16.7.68 சென்னை சென்று இராயப்பேட்டை அரசினர் மருத்துவச் சாலையில் சேர்ந்தேன். எனக்கிருந்த நோய் அண்ட வாதம் என்னும் விதைப்பை யூத்தம். (கனகம்) அம்மையாருக்கு எழுதியுள்ள முடங்கலில் காலில் ஒரு கட்டியென்று குறித்திருக் கிறேன். அங்ஙனமே அவர்களிடம் சொல்க.

20.7.68அறுவையாயிற்று.

26.7.68 தையல் பிரிக்கப்பட்டது.

மறுநாள் வெளியேறி நேற்று மீண்டேன்.

என்னால் இன்று நடக்க இயலாது.

இன்னும் ஒரு மாதம் செல்லும்.27

6

எனக்கு இன்று இங்குள்ள கடும்பனியால் ஈளை நோய் தாக்கி உள்ளது. ஆதலால் பனிக்காலம் முடியும்வரை எங்கும் செல்ல முடியாது. சென்னை வானிலை மட்டும் எனக்கு ஒத்துக் கொள்கிறது. அங்குள்ள கடற்காற்றே அதற்குக் கரணியம்.-

28

இன்று பிற்பகல் எனக்கு இங்குத் தங்கசாலைத் தெருவில் (198) வலக்கண் படல அறுவை நிகழும். ஒரு கிழமை மருத்துவ விடுதி. ஓரிரு கிழமை திரு. முத்துக்கிருட்டிணன் இல்லம். அதன் பின் காட்டுப்பாடி;

29

உடல்நிலை இன்னும் திருந்தவில்லை. இரவில் மாத்திரை விழுங்கினால்தான் தூங்க முடியும். அதோடு ஒரு மாதமாக ராவுணவில்லை. உடல் மெலிவுள்ளது.

24.6-2-68 (மி.மு.சி.)

26.15-6-68 (மி.மு.சி.)

28.10-12-68 (மி.மு.சி.) 30.4-1-69 (மி.மு.சி.)

30

25.23-3-68 (மி.மு.சி.)

27.30-7-68 (மி.மு.சி.)

29.20 துலை 2000 (த.கு)