உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

127

திருவள்ளுவர் காலம் என்னும் கட்டுரையை நேற்றே அனுப்பிவிட்டேன். பதிவு செய்யாது விடுத்ததினால் சற்றுக் கவலையாகத் தானிருக்கிறது. பதிவிற்கு 70 புதுச்சல்லி முத்திரை யொட்ட வேண்டியிருப்பதால் இற்றைச் செல்வ நிலை சிக்கனத்தையே விரும்புகின்றது. கட்டுரை வந்து சேர்ந்தததை உடனே தெரிவிக்க.31 ஈளைத் தெல்லை பொறுப்பு வியலாது பொங்கலன்றே இங்கு வந்தேன்.32

எனக்குக் கண்ணறுவையானது, ஒரு கிழமை அறுவை விடுதியிலும் ஒரு கிழமை மறைமலையடிகள் நூல் நிலையத் திலும் ஒரு கிழமை மேலைத் தாம்பரம் திரு. முத்துக்கிருட்டிணன் ல்லத்திலும் ஒரு கிழமை ரு கிழமை காட்டுப்பாடியிலும் இருந்து விட்டு இங்கு வந்து என் மகள் வீட்டில் தங்கியிருக்கிறேன். கண் மருத்துவம் சிலை 3 வரை தொடரும். அதன்பின் கண்ணாடி வாங்கி அணிந்து கொண்டு காட்டுப்பாடி சென்று 10ஆம் பக்கல் திருச்சி சென்று அசோகா உண்டிச் சாலையில் தங்கிவிட்டு மறுநாள் அன்பருடன் பறம்புக்குடி செல்வேன்.

L

33

திருச்சி ஊரகக் கொதிகலன் தொழிற்சாலையன்பர் பல மாதங்களாக மாதந்தோறும் 50 உரூபாவும் உரூபாவும் பெரியார் கல்லூரியன்பர் 20 உரூபாவும் அனுப்பி வருகின்றனர். இவ் வுதவின்றேல் சென்ற விடையிலிருந்து என் வாழ்க்கையே நடைபெற்றிருக்காது. இன்றும் அதுவே பேருதவி.

என் நூற்கு உதவுவதினும் அதற்கு மேலான என் வாழ்வுக்கு உதவுதலே சிறந்தது; இன்றியமையாதது.

34

என் உறையுட் புறக்கடைத் தோட்ட வேலை மிகுதியாலோ உணவுத் தவற்றாலோ சென்ற கிழமை செவ்வாய் வைகறை மயக்கம் வந்து விழுந்துவிட்டேன். இன்னும் முழுத் தெளிவு. மீளவில்லை. ஆயினும் என் சொல்லை நிறைவேற்றற் கும் திரு.நெடுமாறன் (கேசவன்) ஆர்வத்தைத் தணித்தற்கும் திரு. சேயோனைத் துணைக்கொண்டு முந்தா நாள் ஞாயிறு காஞ்சி சென்று அவர் திருமணக் கரணத்தை நடத்தி வைத்தேன். 35

உணவு வகையிலும் உழைப்பு வகையிலும் தவறாக நடந்து கொண்டமையால் சென்ற செவ்வாய் வைகறை மயங்கி விழுந்து 31. 8-1-69 (மி.மு.சி.) 33.3-12-69 (மி.மு.சி.)

35.8-9-70 (மி.மு.சி.)

32.24-1-69 (மி.மு.சி.)

34.21-1-70 (மி.மு.சி.)