உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ட்டேன். இன்று நடமாட்டமுளதேனும் முழுத் தெளிவுமாக வில்லை. ஏற்கெனவே என் முன்னைக் கண்ணொளியில்லை. இன்று நரம்புத் தளர்ச்சியும் உளது. இந்நிலையில் நான் எங்கும் செல்ல இயலாது. தக்க துணையின்றி.3

36

செந்தமிழ்ச் செல்வியில் ஒரு செய்தி; அதனைக் காண்கிறார் பாவாணர். இரக்கமிக்க அவர் உள்ளம் கசிகின்றது: கலங்கு கின்றது;தம் வாழ்வை மீள்பார்வை பார்க்க ஏவுகின்றது! தம் மனைவியை இழந்து தவித்த தவிப்பும், அத் தவிப்பின் விளைவும், அவ் விளைவை விலக்குவதற்கு எடுத்துக்கொண்ட கடைப் பிடிப்பும் பாட்டுருக் கொண்டு பனித்துக் கிளர்ந்தன. அந்த உருக்கம் அருமையிலும் அருமையாம்!

74. பி. 57 க.க. நகர், சென்னை-78

15-11-77

அருந்தமிழன்பீர்,

செல்வ மேயெனுஞ் செல்வஞ் சென்றதைச் செல்வி வாயிலாய்த் தெரிந்து வருந்தினேன் கொல்வ கையெனுங் குறிப்பி லாமையாற் சொல்வி னைக்குமைச் சூழ்ந்த மர்த்தினேன் புற்று நோயினாற் போன என்மனை பற்றி நீடியே பரிந்தொ ரீளையைப் பெற்று ழந்தபின் பிழையை நோக்கியே முற்று நீக்கினென் முதல்வ னருளினால் பெண்ணி னற்றுணை பிறிதொன் றின்மையால் நண்ணி வாழ்வதே நாயன் விரும்பினும் கண்ணி னன்மனை கணவன் கண்முனே கண்ணை மூடுதல் கருதின் நன்றாரோ.

ஆற்று மளவிறந் தவல நேரினும்

போற்றும் வகையிலாப் புல்லென் னீர்மையில்

நோற்று மக்களை நோக்கி யேதமைத் தேற்றிக் கடமைகள் தீர்த்தல் தக்கதே.

36. 7 மடங்கல் 2002 (த.கு)