உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூல்வரு நிலையும் நன்றியுரையும்

கடிதம் இலக்கியமாகக் கருதப்படுதல் புகழ்வது அன்று. அஃது உலகெலாம் பரவியுள்ள பழமை வழிப்பட்டதே!

வாழ்வியலில் இயல்பாக ஊன்றியுள்ள கடித வரைவு. வனப்புகளிலும் (இலக்கியங்களிலும்) இடம்பெற்று இன்பஞ் சேர்ப்பது ஆர்வலர்கள் அறிந்த செய்தியே.

மாதவியார் கோவலனுக்கு வரைந்த கடிதம் தனிப் பெருமைக்குரியது! தன் காதற் கிழவனுக்குக் காதலி விடுத்த அக் கடிதம், அக் காதற் கிழவன், தன் அப்புப் பெற்றோர்க்கு விடுக்கும் கடிதமாகவும் அல்லவோ பொருள் பொதிந்து வாய்த்திருந்தது! ஒரு கல்லிலே இரு மாங்காய் வீழ்த்துதல் திறமாகலாம். ஆனால், ஒரு சொல்லிலே இருவேறு செய்திகளை உரைப்பதாக அமைத்தல் அருமையன்றோ! அடிகளார் திறம் இருந்தவண்ணம் அதுவே

என்க.

ஓலையும் ஆணியும் அல்லது இதழும் தூரிகையும் இல்லாமல், நெற்றிப் புனைகோலத்திலேயே உள்ளக் குறிப்பை எழுதிக் காட்டி, அதற்கு அவ்வண்ணமே மறுமொழியும், மறுமொழிக்கு மறுமொழியும் பெற்றுக்கொண்டமை, அதிலும் அக் காதல் தூதாகத் தன் மனைவியையே ஆட்படுத்திக் கொண்டமை கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதைப் பெருஞ் செய்தியாம்.

இலக்கிய நூல்களில் இடம்பெற்ற கடித அமைப்பைச் சீட்டுக் கவியாக்கி நடைமுறைப்படுத்தியமை ஒரு வளர்ச்சி நிலையாகும். தமிழிலுள்ள சீட்டுக் கவிகளைத் தொகுத்தாலே ரு பெருந்திரட்டாகவும், பல்வேறு வரலாற்றுப் பொருளாகவும் அமையும் என்பது அறியத்தக்கவையாம்.

பெருமகனார் நேரு தம் மகளார்க்கு வரைந்த கடிதம், உலக வரலாறாக உலவுதல் உலகறிந்த செய்தி.

தவத்திரு மறைமலையடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங் கள் புனைகதையாய்ப் புகழ் பெற்றது!