உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என அறிஞர் மு.வ. இந்நூற்றாண்டில் எழும் சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை நோக்கில் வரைந்த கடிதங்கள் தமிழிலக்கிய வகையுள் ஒன்றாகித் தளிர்ப்புறுத்துவன.

அறிஞர் அண்ணா அவர்கள், தம்பிக்கு வரைந்த தகவார்ந்த கடிதங்கள் இளைஞர்களைத் தட்டியெழுப்பிய தனிப்பெருமை வாய்ந்தது என்பதை எவரும் ஏற்கத் தவறார்.

-

இனிக் கடித இலக்கியமாக்காமல், கடிதமாக இயல்பாக எழுதப்பட்டவையும் தனிப் பேரிலக்கியமாகத் திகழும் சிறப்பு வாய்த்தமை நாடுகண்டதேயாம்.

வள்ளலார் கடிதங்களையெல்லாம் அரிதின் முயன்று தொகுத்த பெருந்தொண்டு பேராளர் பாலகிருட்டிண முதலியார், வள்ளலார் திருப்பெயரை நினைவார் உள்ளகத்தெல்லாம் ஒன்றி றைவோராம்!

தவத்திரு மறைமலையடிகளார் கடிதங்கள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்படவில்லை எனினும், தொகுத்த அளவுக்குப் பாராட்டும் பான்மையயே!

காந்தியடிகளார் கடிதங்களையும், விவேகானந்தர் கடிதங் களையும் தொகுத்து எழிலுற வெளியிட்ட, அவர்கள் திருப் பெயர் தாங்கும் அமைப்புகளை, எத்துணையளவு பாராட்டினும் தகும்!

-

மு.வ.வின் கடிதங்களைத் தொகுத்து வெளிப்படுத்திய முயற்சியை - அவர் துணைவேந்தராகச் சிறப்புறுத்திய மதுரை காமராசர் பல்கலைக் கழகமே மேற்கொண்டது மதிப்பரிய நினைவுக்குறியாம்!

-

இப் பாவாணர் கடிதத் தொகுப்போ இவ்வகையில் தனி யொரு வகையதாம். இத்தொகுப்பில் அவர்தம் கடிதங்களுள் முற்றாக ம் பெற்றவை ஒரு சிலவே. எஞ்சியவை, வேண்டும் கருத்தை வேண்டும் இடத்து எடுத்து இணைத்து வைக்கப் ம் பெற்றவையாம். ஒரு கடிதத்திலுள்ள பல செய்திகள், பொருள் கருதிப் பிரிக்கப்பெற்று வெவ்வேறிடங்களில் பெற்றுள்ளன என்க.

டம்

தமிழர் வைப்பாகப் போற்றத் தக்கனவும், மொழிவழியால் நலங்காண விழையும் முழுதுணர்வாளர்க்குள் முட்டுதல் பிரித்தல் பிளத்தல் பிணங்கல்

-

-

இன்னவற்றுக்கெல்லாம்

-