உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

LO

5

இடந்தராதனவுமாகிய பகுதிகள் மட்டுமே பகுதிகள் மட்டுமே இத்தொகுப்புப் பொருளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன!

ஒரு பொருட்டொடர்பற்றி வரையும் கடிதம் எனின், திட்டமிட்டுக்கொண்டு நூலுருவாதலை நெஞ்சில் பதித்துக் காண்டு, கட்டுக்கோப்போடு கருதிச் செய்யப்பெற்றதாக அமைந்திருக்கும். ஓர் உணர்வு வழிப்பட்ட நிலையில் ஒருவர்க்கு எழுதும் கடிதம், மற்றோர் உணர்வு வழிப்பட்ட நிலையில் எழுதும் கடிதத்தோடும் முரணாகி முற்றிலுமே எதிரிடையாகி முனைப்பின் வீறிக் காட்சி தருதலும் வழக்கே! அந்நிலை, உணர்வுடையார் எவர்க்கும் தவிர்க்க வொண்ணா நிலைமையதாம். அதற்குப் பாவாணரும் விலக்குடையர் அல்லர்! ஓஓ!' என்று பாராட்டப்பட்ட ஒருவரையே ஒருவர் கோளால் உருத்திரிந்து 'ஆஆ' 'இப்படிப்பட்டவரா?' என்று பழித்து ஒதுக்கித் தள்ளுதற்கு இடனாகி இடராகிவிடுதல் காணக் கூடியவையே! அவ்வுணர்வுநிலை, உலகியல் பொதுநிலை! நம்பிக்கையில் ஒரு சொல்லும், நம்பாமை தலை தூக்கியதால் ஒரு சொல்லும் சொல்லுதல் உலகியல் பொதுநிலையே! மொழி ஞாயிறு பாவாணர் நிலை, தனித்தமிழ்க் குறிக்கோள்நிலை; தமிழ் திரவிடத்திற்குத் தாய் என்னும் நிலை; ஆரியத்திற்கு மூலம் என்னும் நிலை. மாந்தன் முதல் தோற்றம் குமரிக் கண்டமே என்னும் நிலை; உலக முதல்மொழி தமிழே என்னும் நிலை ஆகியவே! இவற்றில் காணும் பாவாணர் என்றும் ஒரே நிலையரே!

6

-

நோயிடையில் நொம்பலப்பட்டாலும், இழப்புகளில் டருற்றாலும், பழிச்சொற்களுக்கு இடையே பதைப்புற்றாலும், திடுவிளைவுக் குட்பட்டுத் தெருமந்தாலும் அப்பொழுதும் எப்பொழுதும் மாறாத் தனிப்பெரும் பொருள், தித்திக்கத் தித்திக்கத் தீந்தமிழே வடிவமாகிய - வாழ்வாகிய - தேவநேயம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தனித் தேவநேயமேயாம்! இவற்றை, ஒன்றோடு ஒன்று பிணைத்துப், பிணங்குதல் அவர்தம் தந்நலப் பார்வையின் தளிர்ப்பும் - தழைப்பும் தடிப்புமே யன்றிப் பிறிதொன்றன்றாம்!

ர்க

-

பாவாணர் கடிதத்தில் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ள வேண்டுவது ஏன்? அப்படி அப்படியே அமைத்துக் காட்டினால் என்ன? என்னும் வினாக்கள் கிளர்தல் இயல்பே!

“கட்சி, சமய, இன நிலை கடந்தும் தமிழால் ஒன்றுபட வேண்டும்; தமிழ் பிணைக்குமே யன்றிப் பிரிக்காது; கருத்து வேறு பாட்டையும் மறந்து தனித்தமிழ் உணர்வால் கலந்துறைதல்