உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வேண்டும்” எனபனவெல்லாம் தேவநேயர் கடைப்பிடிகள்; அவரால் ஆங்காங்குச் சுட்டப்பெற்ற குறிப்புகள்! இவற்றைக் கருதுதல், இத்தொகுப்பாளர் உணர்வோடும் ஒன்றியவை! பிளந்து பிளந்து, பிரிந்து பிரிந்து, பாழாய்ப் போகும் தமிழர் நிலை - நான்கு பேர் - இருவராய் - இருவரும் ஒருவராய் - அதற்கு மேல் பிரிய முடியாத அல்லது பிரிக்க முடியாத நிலைமை யாலேயே அவ்வொருவராய்ப் போய்க் கொண்டிருக்கும் போக்கைக் காணுங்கால், அதற்குக் களைவெட்டி உரமிட்டு - நீர்விட்டு வளர்தல் அறக்கொடுமை என்னும் உணர்வே, மாறுபட்ட எக்கருத்தும் - எவர் மனத்தையும் புண்படுத்தும் எக்கருத்தும் இயையாமல் விலக்கப்பட்டதற்குக் கரணியமாம்! ஒன்றிரண்டு குறிப்புகள் சுட்டுகள் இடம் பெற்றிருத்தல், தவிர்க்க வாண்ணாமையாலும், மேலே பாவாணர் வரலாறு வரை தற்குக் கருவியாக அமைந்து கிடக்கும் தன்மையாலுமேயாம்!

ம்

-

ஏறத்தாழ 50 ஆண்டுகளில் பாவாணரால் எழுதப்பட்ட கடிதங்கள், ஏறத்தாழ 1520 இத்தொகுப்புக்கு மூலப்பொருளாக வாய்ந்தன. இதே அளவு எண்ணிக்கையுள்ள கடிதங்கள் அன்பர் கள் ஆர்வலர்கள் ஆகியோரிடத்தே இன்னும் இருத்தல் கூடும்! அவற்றையும் தொகுத்து நோக்கும் வாய்ப்பும் கை கூடின், இன்னும் எத்துணையோ அரிய கருத்துக்களைத் தமிழுலகம் பெறக்கூடும்! இத்தொகுப்பைக் காணும் அளவிலேனும் அவர் கள் உள்ளம் இத்தொண்டுக்குத் தலைப்பட்டு உதவ முந்துமாக! அவற்றைப் பெறும் வாய்ப்புக்கிட்டின் மற்றொரு கடிதத் தொகுப் பும் கட்டாயம் வெளிப்படுமாம்! நூல் அச்சீடு முடிந்த நிலையில், பேரா. மதிவாணர் அவர்கள் வழியே கடிதங்கள் பத்து வரப் பெற்றமை அடுத்த தொகுப்பின் அடிக்களமாம்.

சென்னை இலிங்கிச் செட்டித் தெரு மறைமலையடிகள் நூல்நிலையம், தமிழ்நூல் வைப்பகம் மட்டுமன்றித் தமிழறிஞர் கடித வைப்பமாகவும் திகழக் கருத்து வைத்தவர்கள், தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள். கழகத் தோற்ற நாள் தொட்டு அதன் வளர்ச்சிப்படி ஒவ்வொன்றிலும் தம் முத் திரையைப் பதித்து முழுமையாக்கி வைத்த பெருமகனார் அவர்! கழகஞ்சார்ந்த புலவர்கள் கடிதங்களையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் போற்றிப் பேணிக் காத்து வரலாற்றுக் கருவூலமாகத் திகழும் வகையில் ஒட்டுக்கோப்பில் ஒட்டி அட்டை கட்டி வணமாக்கி வைத்துள்ளார்! அதில் பாவாணர் கடிதங்கள்

-

-