உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஒவ்வொரு உரூபா குறைக்கப்படுமென்றும் சு.கு. அருணாசலத் திடம் கண்டிப்பாய் சொல்லிவிடுக.

மரத்திற்றாழ்ந்த மனிதன் :

64

மாந்தன் உயிரினத்தில் எத்தனை உயர்ந்தவனாயினும் நிலையாமையை நினைக்குங்கால் ஐயாயிரம் ஆண்டு உயி ரோடிருக்கும் மரத்தினும் தாழ்ந்தவனாகின்றான்.

பொற்கிழி வழங்கல் :

65

வருகின்ற ஞாயிறு (16-10-66) காலை 10 மணிக்குத் துறையூர் பிரசன்னா திரைப்படவரங்கில் தவத்திரு குன்றக்குடியடிகளார் தலைமையில் எனக்குப் பொற்கிழி வழங்கப்பெறும்.

புகைவண்டிப் போக்கு :

66

நேற்றைப் புகைவண்டி வழிப்போக்கு எதிர்பாரா அளவு ஏந்தாயிருந்தது. பகலிற் பேரியங்கியில் நீண்ட நேரம் சலிப்புடன் வழிப்போவதைவிட இங்ஙனம் இரவோடிரவாய்க் குறுகிய நேரத்தில் வந்து சேர்வது நன்றென்று தெரிகின்றது. இனிமேல் இங்ஙனம்தான் வருதல் வேண்டும்.

குறிக்கோள்:

67

என் வாழ்க்கைக் குறிக்கோள் தமிழை ஆரியத்தினின்று மீட்பது. 68

அவரும் இவரும் :

ஒரு பிராமணர் முதல்வராயின் சமற்கிரதத்திற்கில்லாத பேராசிரியர் பதவியைப் புதிதாய் உண்டு பண்ணி ஒரு பிராமணரை அமர்த்துகிறார். ஒரு தமிழர் அப்பதவிக்குவரின் ஏற்கெனவே இருந்த தமிழ்ப் பேராசிரியர் தம் வேலையை இழக்க நேர்கின்றது. என்றே இருவகை முதல்வர் ஆட்சிக்கும் இடைப்பட்ட முரண் பாட்டைக் குறித்திருக்கின்றேன். குறள் நெறியை மீண்டும் பார்த்தால் கருத்துத் தெளிவாயிருக்கும். 69

64.2-7-66 (மி.மு.சி) 66. 10-10-66 (மி.மு.சி)

68.22-10-66 (மி.மு.சி)

65.13-8-66 (மி.மு.சி) 67.17.10.66 (மி.மு.சி)

69.22-10-66 (வி.அ.க)