உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வருவதால் தங்கள் பணவிடை யெல்லாம் நன்கொடையாகவே தோன்றுகின்றன.

74

கடைப்பட்ட இடம் : :

2 ஆம் உ.த. மாநாட்டிற்கு வரும் கட்டுரைகளை ஆய எண் குழுக்கள் அமைத்துள்ளனர். அவற்றுள் தமிழ்த்தாட்கள் என்னும் 8ஆம் குழுவில் என்பெயர் இறுதியில் சேர்க்கப்பெற்றுள்ளது. இது து கடைப்பட்ட இடமாயினும் உட்புகுந்து வேலைசெய்ய நல்வாய்ப்பென்று கண்டு இசைந்துள்ளேன். சட்டர்சியும், காத்திரேயும் சாம்பமூர்த்தியும்தான் தலைமையான இடம் பெற்றுள்ளனர். குழுவமைப்பு ஆரியச் சார்பில் நிகழ்ந்துள்ளது. வியப்பினும் வியப்பு :

·

75

இன்று சென்னையினின்றும் திரும்பப்பெற்ற அழைப்பிதழ் ங்கு வந்து சேர்ந்தது . என் பயன்? ஒருவரா இருவரா, சிறுவரா எளியரா, விழாவில் என்னைச் சிறப்பிக்க வந்தவர் எத்துணைப் பெரியார், எத்துணை அரிய நேரத்தை எனக்காகச் செல விட்டனர். இங்ஙனம் பல பெரியார் ஒன்று விடல் எளிதா? நான் வராமையால் என்னைப் பற்றி அவர் எத்துணையோ தவறாகக் கருதி என்னை வெறுத்துமிருப்பரே! இவ்விழா ஏற்பாட்டிற்கு எத்துணைக் காலமும் முயற்சியும் தங்கட்குச் சென்றன. அவ் வளவும் வீணாயிற்றே!

தையெல்லாம் நினைக்கும்போது என் நெஞ்சம் எத் துணைப் புண்படுகிறது. பிற புலவர்க்குப் பெரியவர் பலர் சேர்ந்தால் அதில் வியப்பொன்றுமில்லை. எளிய நிலையில் இருப்பவனும் முகமன் கூறிப் பிறரைப் புகழும் இயல்பில்லாத வனும் புலவரும் விரும்பாத தனித்தமிழ் நடையினனும் ஆரியத்தை வன்மையாய் எதிர்ப்பவனும் ஆகிய என்னைப் பாராட்டப் பலர் கூடினாரெனின் அது வியப்பினும் வியப்பாம். 76

(குறிப்பு: உந்திய உணர்வில் எழுதிய பாவாணர், கடித முகவரியில் ‘மதுரை-10” என்பதை விடுத்துச் ‘சென்னை - 10’ என எழுதிவிட ஊர்சுற்றி வந்துளது கடிதம்.)

74.13-5-67 (மி.மு.சி) 76.9-9-67 (வி.அ.க.)

75.30-8-67 (மி.மு.சி.)