உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

இன்று பார்த்த அச்சகம் புதியது, முத்துப்போன்ற

புத்தெழுத்து.

93

நன்றிக் கடன் :

திரு.அ. இராமசாமிக் கவுண்டர் எனக்குச் செய்த நன்றிக்கு அடையாளமாக எங்ஙனமும் அவர் வரலாற்றை நான் வெளி யிட்டு விடுவேன்.94

அகவையால் மறுப்பு :

என் வேலையைச் செய்ய வேறொருவர் இல்லாதபோது என் அகவையைச் சொல்லி மறுப்பது பொருளற்றது.

கருத்துக்கு ஒப்பு :

95

தாமதைத் திருச் சுப்பையாப்பிள்ளை அவர்களையே நிகழ்ச்சி நிரலில் குறித்துக்கொள்க. அவர் வராவிடினும் குற்ற மில்லை. புலவரென்றிருப்போரெல்லாம் ஒரு நிகரரல்லர். வரிசையறிதலே முதன்மையானது. திரு.வ. சுப்பையாப்பிள்ளை ச0 ஆண்டுகளாகத் தமிழ்நூல் வெளியீட்டில் ஈடுபட்டவர். 2000 நூல்கட்குமேல் வெளியிட்டுள்ளார். என் திருக்குறள் தமிழ் மரபுரை இறுதிப் பத்துப் படிவங்களையும் தாமே முழுப் பொறுப்பேற்றுத் திருத்தி அச்சீட்டு வேலையை மேற்பார்த்து வருபவர். நூல் முழுமையிலுமுள்ள சிறப்புக் கூறுகளை யெல்லாம் படித்தறிந்தவர். ஆதலால் அவரே வெளியீட்டுரை நிகழ்த்த மிகத் தகுதிவாய்ந்தவர். என்றும் என் கருத்துக்கும் ஒத்தவர்.6

96

வரவு கணக்கு :

புத்தனாம்பட்டி ஆசிரியர் முருகனார் தண்டிக் கொடத்த தொகை 2000. தி.ம.உ. செலவாகியுள்ளது 8000. திருக்குன்றக்குடி அடிகளார் ஏற்கெனவே எனக்கு 1001 உரூபா கொடுத்திருக்கின் றார்கள். 97

பதினென் பிரிவு :

திரு. அறவாழியார் அன்று பறம்புக்குடியில் முகவையரசர் குடியைச் சேர்ந்த ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்

93.6-9-68 (மி.மு.சி)

95.17. துலை 2000 (த.கு)

97. 1. சிலை 2000 (த.கு)

94.23-12-68 (மி.மு.சி)

96.1 சிலை 2000 (த.கு.)