உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தமிழாக்க அன்பளிப்பு :

149

இவற்றின் (நூல்களின்) விற்பனையிலேயே என் பிழைப்பு நடப்பதால் அன்பளிப்புப் படிகள் எவர்க்கும்கொடுக்க இயல வில்லை. ஆயின் மேலையார் மொழிநூற் குருட்டுத் தனத்தைப் போக்க The Primary Classical Languagage of the world 37 படிகள் உலகத் தமிழ்க் கருத்தரங்கில் கொடுக்கப் பெற்றுள, தமிழாக்கம் நோக்கி, அடுத்த மாநாட்டிற்குள் அவருட் பெரும்பாலார் மனமாறலாம். 87

மேலையர் ஒப்பாக் குமரிக் கொள்கை :

மேலைக் கிறித்தவர் ஏதேன் தோட்டக் கதையைக் குருட்டுத்தனமாய் நம்புவதாற் குமரிநாட்டுக் கொள்கையை ஒப்புக்கொள்ள விரும்புகின்றிலர். 88

புது நூல் திட்டம் :

89

மொழிச் சிக்கல் தீர்வு’ என்னும் நூல் எழுதத் திட்ட மிட்டதாக 21-3-68 கடிதம் வழி அறிய முடிகின்றது. மின்விசிறி :

செயலருள்ளிட்ட இருபதின்மர் தனித்தமிழ்ப் பற்று விஞ்சியவர். வேம்பாத் தொழிற்சாலை மு.ம. (முத்தமிழ் மன்ற) உறுப்பினர்கள் சொன்னவாறு செய்தனர்; வேண்டியவாறு தந்தனர். அதனால்தான் ஒரு மின் விசிறி வாங்க இயன்றது.

90

திருச்சிப் பணத்தைக் கொண்டு ஒரு மின் விசிறி வாங்கி விட்டேன். 210 உரூபா. இது கடந்த ஐந்தாண்டாகக் கொண் டிருந்த எண்ண நிறைவேற்றம்.

இருவகை முயற்சி :

91

பயனுறு முயற்சியாயின் எவ்வளவும் செலவிடலாம்.

பயனில் முயற்சிக்குச் சிறிதும் செலவிடக் கூடாதென்பது என்கருத்து.

செலவொடு உடல் வருத்தமும் நேரும்.92

87.31-1-68 (வீ.ப.கா.சு)

88.31-1-68 (வீ.ப.கா.சு)

89.மி.மு.சி.

90.15-4-68 (மி.மு.சி.)

91. 23-4-68 (மி.மு.சி)

92.10-7-68 (மி.மு.சி)