உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

விற்று வாங்கல் :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

குப்பாயத்தையோ வேறு பொருளையோ விற்று ஒரு

பொத்தகமும் வாங்கினதில்லை.82

கணக்க :

என் மதுரை மணிவிழா அழைப்பிதழ் விழாவிற்கு மறுநாள் தான் கிடைத்தது. அதனாற் போக இயலாது போயிற்று. சென்ற காரி சென்று ஞாயிறு பெற்றுத் திங்கள் திரும்பினேன்.

ஆங்கில நூற்குத் தந்த 2500 சேர்த்து 7000 எனக் கணக்குக் காட்டியுள்ளனர். அது சரிதான். அதுபோக 4500 கைக்கு வந்தது. அதில் 1000 கடனுதவ நேர்ந்துவிட்டது.

மரபுரைக்குப் பின் மறுப்பு :

83

தமிழிற் பிறமொழிச் சொற்கள் என்னும் கட்டுரையைத் தூள் தூளாக நொறுக்கி யெறிந்துவிடலாம். ஆயின், சற்றுப் பிந்தித் தான் செய்யவேண்டும். இன்று, திருக்குறள் தமிழ் மரபுரை எழுதி வருகின்றேன். முடிக்க இன்னும் ஒரு மாதஞ் செல்லும். அதன்பின் கட்டுரை மறுப்பு வரும். ஏறத்தாழ 20 பக்கம் ஆகும்.

84

காணவில்லை :

1. Archaeology and Tamil studies.

2. Notes on persion words in Tamil -

85

என்ற இரு கருத்தரங்குச் சுவடிகள் மறைமலையடிகள் நூல் நிலைய மேசைமேல் வைத்திருந்தேன். அவற்றைக் காணவில்லை. நேரடியும் வெளிப்படையும் :

ஆட்சியில் ஏதேனும் குற்றங் குறையிருப்பின் அதை நான் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தெரிவிப்பேனேயன்றி மறைமுகமாய்ப் புனை பெயரில் என் தொடர்பு நீங்கிய இதழில் எழுதேன்.86

82. 23-9-67 (வி.அ.க.)

84. கூதுலை ககூகூகூ (வி.அ.க.)

86 29-1-68 (வி.அ.க.)

83.11-10-67 (மி.மு.சி)

85.19-1-68 (வி.அ.க.)