உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

மறைமலையார் அகம்; பாரதிதாசனார் அகப்புறம்; திரு. அண்ணாத்துரையார் புறம்; பேராயத்தார் புறப்புறம்.

நான்வேறு தமிழ்வேறு அன்று; என்னைப் புறக்கணித்தது தமிழைப் புறக்கணித்ததே.

தமிழ் இணைக்குமேயன்றிப் பிரிக்காது. பண்பாடு என்றும் உயர்வையே காட்டும். 103

பிரித்தறிதல்:

புலவரைச் சிறப்பாகப் பெரும் புலவரை அவரவர் ஆற்றலும் தொண்டும்பற்றிப் பிரித்தல் வேண்டும்.

திரு. வி.க. சமயப் பொதூவுணர்வு, பெண்ணின் பெருமை, தொழிலாளியுரிமை முதலியவற்றை நாட்டினவர்தான். ஆயின் மொழித் துறையில் எல்லாரும் பின்பற்றவேண்டிய ஈடிணை யில்லா மாமலை மறைமலையடிகளே.

ஒருமுறை திரு. வி.க. “என்மொழி தென்மொழியும் வட மொழியும் கலந்த இன்மொழி” என்றார் என்னிடம். இதிலிருந்து அறிந்துகொள்க. 104

தமிழியக்க அமைப்பு :

உ.த.க. ஒரு பெருந் தனித் தமிழியக்கமாதலால் தமிழியக்க மென்று வேறொன்றிருக்கத் தேவையில்லை. 105

ஒரு முற்றதிகாரி :

தனித்தமிழ் மறவருள் ஒரு கடுங்கோல் முற்றதிகாரி தலைவ னாக வந்தாலொழியத் தமிழ்த் தொண்டர் எத்துணையர் தோன்றினும் தமிழ் பேசும்நடைப் பிணங்கள் செவிக்கொளா; மனந்திருந்தா; ஆயினும் நம் பணியைத் தளராது செய்வது நம் கடமையே. 106

எழுத்து மாற்றம் :

தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தமிழின் தனி நிலைமையே மாறிவிடும். அது பெரியாரின் அடிப்படைக் கொள்கையுமன்று"

.107

103. 21. விடை. 2002 (த.கு)

105. 5-11-70 (த.கு)

107. 9-11-79 (வி.பொ.ப.)

104. 21. விடை. 2002 (த.கு)

106.5-11-79 (வி.பொ.ப)