உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உண்மை வெளிவர வேண்டும். கடுப்பும் காழ்ப்புமின்றி நட்பு நிலையில் ஆய்வு மனப்பான்மையுடன் இது நடைபெறுக.

வினாவுக்கு விடை தருவார் :

55

கேட்ட வினாக்களுக்கு விடை தரத்தக்கவர் என்பதே Ref- erees என்னும் சொல்லால் உணர்த்தப்படும் பொருள். நாம் வினவிய பின்னன்றித் தாமாக அவர் கருத்துத் தெரிவிப்பவர் அல்லர். 56

மிகத் தோது:

பேரா. மதிவாணனார் ன்று வேலையிற் சேர்ந்து விட்டார். புலவர் இளங்குமரனாரும் உடனே அமர்த்தப்படின் மிகத் தோதாக இருக்கும்.

தமிழ்க்குச் செய்யும் கேடு :

57

மறைமலையடிகள் இல்லாதபோது நான் ஒருவனே தமிழ் காப்பவன். எனக்குச் செய்யும் கேடு தமிழுக்குச் செய்வதே.

என்றும் இதே நிலை :

58

காலமெல்லாம் தனித்தமிழ்க் கொள்கையினால் குறைந்த சம்பளம் பெற்றுவந்தேன். இன்றுதான் இறுதிக் காலத்தில் சம்பளம் சற்று உயர்ந்திருக்கின்றது. இன்னும் குடியிருக்க வீடில்லை. பொத்தகம் வாங்கப் பணமில்லை.

இனிமேல்தான் வரவேண்டும் :

59

தமிழ்நாட்டுக்கு இன்னும் முழுத் தமிழன் தலைவனாக

வரவில்லை.60

இம் முத்துமாலைத் தொகுப்பில் அறுபது குறிப்புகள் ம் சுட்டப்பட்டுள்ளன. உட் குறிப்பு கிளைக் குறிப்பு ஆகியனவும் இவற்றுள் உள்ளன இவற்றுள் பெரும் பகுதியும் நூல் தொகுப்பும் ஆய்வுமே இருத்தலைக் காண்பார் கருதவேண்டுவன பல. அவற்றுள் தலையாய ஒன்று ஓர் ஆய்வாளிக்குக் கருவி நூல் களில் எத்துணைக் காதல் உண்டு என்பதை அறிந்து கொள்வதே!

55. 31-1-75. 57.25-4-75.

59. 22-8-77

56.26-2-75

58.22-8-77.

60.1-9-77.