உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

எம்மட்டு?

167

சிந்தாற்றங்கரை பற்றிய மூன்று மடலங்களை உடனே வாங்கி விடுக. என்னைக் கேளாதே வாங்கியிருக்கலாமே! ஆயிரம் உரூபா எம்மட்டு? இன்று கிடைப்பதே பெரிது. வேத நூல்களும் பகுதி பகுதியாய் வரினும் வாங்கிவிடுக.

51

செ.ப.க. கழகம் துளு அகரமுதலி வெளியிட்டுள்ளதாகச் சென்னை ஆள்நர் கூறியிருக்கிறார். அதையும் வாங்கிவிடுக. ஊற்றுத் தூவல் :

ஊற்றுத் தூவல் முள்ளில் கூர் நுனி மழுக்க நுனி என இரண்டிருப்பின் கூர் நுனியே வாங்கச் சொல்க.52

உடனே தேவை :

The Ramayana - A Linguistic Study A Linguistic Study உடனே தேவை. ஒருபடி வாங்கியனுப்புக இயலின் Gazetteer of India vol. II.காக்கை பாடினியம் ஆகிய இரண்டும் சேர்த்தனுப்புக.53

தமிழ்ப் பாசறைக் கொடை:

காரைக்குடி அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பாசறை மாணவர் எனக்கு 200 உரூபா நன்கொடை மதுரை வைப்பகக் காசோலை யாக விடுத்திருக்கின்றனர். அத்தொகைக்கு 6 மடக்கு நாற்காலி வாங்க விரும்புகிறேன். மறைமலையடிகள் நூ.நி.வ. மண்டபத்தி லுள்ளது போன்ற 6 உடனே வாங்கிவைத்து அடுத்தமுறை வருங்கால் அன்பு கூர்ந்து கொண்டுவருக. னி வருங்கால் கொணர வேண்டியவை :

1. நல்ல நாற்காலி. 2. வான்மீகி இராமாயணம் கமற்கிருத மூலமும் உரையும். 3 நூலகர் எனக்கு வாங்கி வைத்துள்ள பொத்தகங்கள். 4 புதுவைச் சங்க நூற் சொல்லடைவு. 5. ஒளிப் படை அட்டையில் ஒட்டின ஏசு படம். 54

உண்மை வெளிவரவேண்டும் :

பேரா. மதிவாணன் மீண்டும் முளவுமா முயலே என்னும் கட்டுரை விடுத்திருக்கின்றார். இம்மாதச் செல்வியில் அதை வெளியிடுக. புலவர் இளங்குமரன் மீண்டும் மறுக்கட்டும்.

51. 26-1-74

53. 11-4-74.

52.5-2-74.

54.16-7-74.