உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அரைவிலை :

மறைமலையடிகள் வழிச்செல்லும் தமிழ்த்தொண்டன் நான் ஒருவனேயாதலால், கழக வெளியீடுகளை எனக்கு அரை விலைக்கு விற்பதே தகும்.45

தமிழ் வரலாறு எழுதத்தக்கவர் :

கோழைகளும் கோடரிக் காம்புகளும் தன்னலப் புலிகளும் பணப்பேய்களும் தமிழ் வரலாறு எழுதமுடியாது." 46

அடிக்கடி வெளிவரத்தக்கது:

‘எது தமிழ்’ போன்ற செய்திகள் செல்வியில் அடிக்கடி வெளிவரல் வேண்டும்.4

47

தொண்டுக்கு அன்பளிப்பு:

திரு. ரு. சுத்தானந்த பாரதியார் தென்னாப்பிரிக்காவில் நற்றொண்டு செய்திருக்கின்றார். அவர் என் நூல்களில் எதை விரும்பினும் அன்பளிப்பாகக் கொடுக்க. அவர்தம் பாரத சக்தி மகாகாவியம் எனக்கு அன்பளிப்பாகத் தந்தாரே.4

எழுத்துத் தடை :

48

கீழைத்திருப் பொத்தகத் தொடர் (Sacred Books of the East Series) ஒரு தொகுதி (50 மடலம்) உடனே வேண்டும். அஃதில்லா மையால் The Lemurian Language and its Ramification எழுதுவது தடைப்பட்டுள்ளது.

49

முந்திக்கொள்ளல் நல்லது :

1975 உலக வேத மாநாட்டிற்காகத் தில்லியில் இருவேறு கழகங்கள் நால் வேதத்தையும் ஆங்கிலத்தில் விரிவாக விளக்கி அச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. இரு தொகுதிகளையும் வாங்கி விடல் வேண்டும். உடனே எழுதி ஒவ்வொரு தொகுதிக்கும் பதிவு செய்துகொள்க. ஏனோ தானோ என்றிருக்க வேண்டேன். எல்லா நாடுகளும் வாங்குமாதலால் முந்திக்கொள்வது நல்லது.50

45. 16-2-73.

47.3-7-73.

49.11-10-73.

46.16-2-73.

48.3-7-73.

50.3-1-74.