உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

முத்துமாலை

165

புறத்திரட்டு இன்னும் அச்சாக இன்னும் அச்சாகவிடின் திராவிடப் பிரகாசிகை (சபாபதி நாவலர்), நாமதீபதிகண்டு, அம்பிகாபதி கோவை, The folk songs of southern India என்னும் புத்தகங்களை அனுப்புக.

39

நூலகப்பெருக்கம் :

நூலகப் பெருக்க வேணவாபற்றி மேன்மேலும் பொத்தகங் கள் வாங்குகிறேன். அடிகளும் நானும் ஒரு தனி வகுப்பைச்

சேர்ந்தவரேம்.

40

முன்னும் பின்னும் அடை :

41

வேர்ச்சொற் கட்டுரைகள் ஆசிரியன் பெயர் ஞா. தேவ நேயன் என்று மட்டும் குறிப்பிடுக. முன்னும் பின்னும் அடைமொழியோ பட்டமோ ஒன்றுமிருத்தல் கூடாது. முகவரி :

K.A. நீலகண்ட சாத்திரியாரின் இல்ல முகவரி உடனே வேண்டும். அதற்காகவே இதை எழுதுகின்றேன். வருகின்ற செவ்வாய் விடை எதிர்ப்பார்ப்பேன். அடுத்த கிழமைக்குள் அவர்க்கு மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பவேண்டும். 42

கம்பரில் வடவெழுத்தா?

6

இம்மாதச் செல்வி 206 ஆம் பக்கம் ‘திருவுடம் பலச' என்பது 'திருஷ்டம் பலச' என்றிருக்கின்றது. கம்பராமாயணத்தில் வடவெழுத்து வருமா? செல்வியிலேயே இத்தகைய பிழை நேரும்போது பிற அச்சகங்களைக் குறை கூறிப் பயனில்லை.43 சாத்திரியார்நூல்

நீலகண்ட சாத்திரி தமிழ்நாட்டு வரலாறுபற்றி வெளியிடும் நூலெல்லாம் என்னைக் கேளாதே விடுக்க. 44

39. 1-11-72.

41. 3-12-72.

43. 16-12-72.

40.3-12-72.

42.16-12-72

44.16-2-73.