உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்டவேண்டிய உண்மை தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே.

மூவகைத் தொகுதிகள் :

36

கலைக்களஞ்சியம் 5 ஆம் மடலம் அச்சாவதாகக் கேள்வி. முழுத் தொகுதியும் கிடைப்பின் ஒன்று வாங்கிவிடலாம்

அ.சி. செட்டியார் தலைமையில் தொகுக்கப்பட்ட ஆங்கில-தமிழ் அகர முதலியும் ஒரு தொகுதி வாங்கின் அதன் குறைகளையும் திருத்தங்களையும் எடுத்துக்காட்டலாம்.

செ.ப.க.க. கன்னட அகர முதலி இருமடலம் முன்பு வாங்கித் தந்தீர்கள். 3ஆம் மடலம் வெளிவந்திருப்பின் உடனே ஒரு படி வாங்கி விடுக்க 37

திருவாய்மொழி :

திருவாய்மொழி 1 முதல் 9 தொகுதிகள் என்று குறித் திருப்பது ஈடா? புருடோத்தமானார் விளக்கவுரையா? எது வாயினும் எனக்குப் பயன்படும். தாங்கள் குறித்துள்ள நூல் களைப் புறநானூறு ஔவை. சு.து. உரையுடன் சரக் கியங்கிவழி உடனே அனுப்பி வைக்க. என்றும் வேலூர் முகவரிக்கே விடுக்க.38 அன்பளிப்புக்கும் புத்தகம் :

செல்வி கட்டுரை பதிவஞ்சலில் விடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அன்பளிப்பையும் பொத்தகமாக விடுக்க

1. நான் கண்டதும் கேட்டதும் (சாமிநாதையர்)

2. சேரார் வரலாறு (துடிசைகிழார் அ. சிதம்பரனார்)

3. ஆழ்வார்கள் வரலாறு 2 பாகம் (கா.ர.கோ. முதலியார்)

4. தமிழ்நாவலர் சரிதை (தனிப்பாடற்றிரட்டு)

5. பண்டைக்காலத்தமிழரும் ஆரியரும் (மறைமலையயடிகள்)

6. புறத்திரட்டு

உரூபா 1-752.

66

5-00

உரூபா

4-00

3-00

66

66

1-00

66

15-00

36. 29-7-72.

37.17-8-72.

38. 23-8-72.