உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

எண்ணி, அவற்றின் நிலைக்கள விளக்கத்தையும் மெய்ப்பாட்டியல் என்னும் தனியியலில் விரித்துள்ளார். அம்மெய்ப்பாடுகளே பாடல், இசை, பாவிகம், நாடகம், சிறுகதை, தொடர்கதை ஆகிய எவற்றுக்கும் இன்றியமையாச் சுவைப்பொருள். ஒருவர் தாம் உணர்ந்த உணர்வை, அதனைக் காண்பார் கேட்பார் தாமும் அப்படி அப்படியே உணர வைப்பது கலைத்திறம் வல்லார்க்கு இயற்கைக் கொடையாம். அக்கொடைப் பேற்றாளர் களுள் தலைப்பேற்றாளராகத் தழைத்தவர் தமிழ்த் தேவநேயர். ஆதலால், அவர் எழுதிய கடிதங்களிலே எண்பான் சுவை களாகிய மெய்ப்பாடாகிய நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன விரவிக் கிடக்கின்றன! விளங்கிக் கிடக்கின்றன. இக் கடிதத் தொகுப்பைக் காண்பார் ஒவ்வொன்றிற்கும் பல பல எடுத்துக்காட்டுகளைத் தாமே கண்டு திளைப்பர். தனித்தனி எடுத்துக்காட்டுகளை விரித்தெழுதின் கடிதத் தொகுப்பின் அளவுக்கே இம் முன்னுரையும் நீளுமெனும் நினைவால் இதனைக் கற்பார் ஆய்வுக்கே ஆட்படுத்தி அடுத்த பகுதியைக் காணலாம்.

-

பாவாணர், 'உயர்தரக் கட்டுரை இலக்கணம்’ என என இரு தொகுதிகள் இயற்றியுள்ளார். அவற்றுள் கடிதம் வரைவதைப் பற்றிய விளக்கம் உண்டு; எடுத்துக்காட்டும் உண்டு. அவற்றுள் சிலவற்றை அறிந்துகொள்ளுதல் அவர் கூறும் அமைப்பு முறைக்கு அவரே இலக்கியமாதலை அறிந்து கொள்ளவும் வாய்க்கும்.

“கடித வரைவு முறையைச் சிலர் முக்கியமாகக் கருதுவ தில்லை. வேலைப் பேற்றிற் கேதுவான விண்ணப்பமும் பரிந் துரையும் பேரூதியத்திற்கேதுவான வணிக எழுத்துப் போக்கு வரத்தும் நெருநன்மைக்கேதுவாக எழுதப்பட்ட முறையீடும் பிறவேண்டுகோளும் கடித வகைகளே. ஆங்கிலம் போன்ற அயன்மொழியிற் கடிதம் வரையும் முறையை எவ்வளவு கருத் தாகக் கவனிக்கின்றோமோ அவ்வளவு கருத்தாகத் தாய்மொழி யாகிய தமிழில் வரையும் முறையையுங் கவனித்தல் வேண்டும்.

66

‘ஒரு வகையில் கடிதம் என்பது எழுதப்படும் பேச்சே, ஒருவருக்கு முன்னிலையிலிருந்து திறமையாகவும் தெளிவாகவும் முறையாகவும் இனிமையாகவும் பேசுவதாற் பெறக்கூடிய பயன்களைத் தொலைவிலிருந்து அங்ஙனம் எழுதுவதாலும் பெறுதல் கூடும். சொல்வன்மை, கன்மனத்தையும் கனிய வைத்து ஆகாத காரியங்களையும் ஆக்குவிக்கும். அங்ஙனமே எழுத்து வன்மையும்.