உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

9

“கடித வரைவு சிலரால் ஒரு கம்மியமாகவும் (Air) வளர்க்கப் பெற்றுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் சிசரோ என்னும் அறிஞர் வரைந்த இலத்தீன் கடிதங்கள் இன்று கற்றோர் உள்ளத்திற்கு இன்ப விருந்தாக வுள்ளன. ஆதலால், இலக்கியம்போற் போற்றப்பட்டு வருகின்றன. கற்றாரெல்லாம் த்தகைய கடிதம் வரையப் பயிலவும் முயலவும் வேண்டும்’ என்று கடிதங்களைப் பற்றிக் கூறும் பாவாணர் கடித உறுப்பு களைப் பற்றியும் கூறுகின்றார் :

1. தலைப்பு (heading), 2. கொளு, 3. விளி (Greeting or Saluta- tion), 4. செய்தி (Communication or Message), 5. உறவுத் தொடர் மொழி (Subscription or leave - taking), 6. கைந்நாட்டு (Signature), 7. முகவரி (Address or Superscription on the envelope) இவ்வேழும் கடித உறுப்புகளாகும்.

தலைப்பு :

எழுதப்பட்ட இடமும் நாளும் குறித்தல் கடிதத் தலைப் பாகும். உறவும், நட்பும், வணிகமும் பற்றியெழுதும் கடிதங் களிலெல்லாம் முதற்பக்க வலப்புற மேன்மூலையில் இடம் மேலும், நாள் கீழுமாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

கொளு :

தலைப்பிற்குச்

சற்று கீழாக,

இன்னாரிடமிருந்து

இன்னாருக்கு என்றாவது இன்னார் இன்னாருக்கு எழுதுவது என்றாவது செய்தி தொடங்கும்முன் வரையப்பெறும் முகவுரை கொளுவாகும்.

விளி :

கொளுவிற்குக் கீழாக இடப்புறத்தில், தனியாய், கடிதம் விடுக்கப்படுவோரை விளிப்பது விளியாகும்.

செய்தி :

விளிக்குக் கீழாக வரையப்படுவது செய்தி.. அது நீண்ட தாயின் பல பாகிகளாகப் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். எழுதப்படுவார் எழுதப்படும் செய்தி ஆகியவற்றுக்கு ஏற்ற நடைச் சிறப்புடையதாக இருத்தல் வேண்டும். கடிதச் செய்தி நிறைவுற்றதாகவும், எழுதும் கருத்தும் செவ்வையானதாகவும், நிறுத்தக் குறிகள் அமைந்தவையாகவும் இருத்தல் வேண்டும்.