உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

27. வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

வாழும் புலவர்கள் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கும் முயற்சியை 1970 இல் தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர்கள் மேற்கொண்டனர். அதற்குப் பாவாணர் எழுதிய, ‘என் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்' என்பது வருமாறு:

தேவநேயன், தோக்கசு (Stokes) என்னும் துரைமகனரால் எடுத்து வளர்க்கப்பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும், அவருடைய இரண்டாம் மனைவியராகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்கும் 1902ஆம் ஆண்டு பெப்ரவரி மீ 7ஆம் பக்கல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, பத்தாம் பிள்ளையாகவும் நான்காம் மகனாகவும் பிறந்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நயினார் கோவிலிற் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐயாட்டைப் பருவத்திலேயே என் தந்தையாரை இழந்து விட்டமையால் வடார்க்காட்டு மாவட்டம் ஆம்பூரிலிருந்த எமக்கையாரிடம் சென்று அங்குள்ள மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியிற் கல்வி முடித்தபின், முகவை மாவட்டச் சோழபுரத்தையடுத்த சீயோன் மலையில் விடை யூழியராயிருந்த யங் (Young) துரைமகனாரின் கடனுதவி பெற்று, பாளையங்கோட்டைத் திருச்சவை விடை யூழியக் கழக (C.M.S) உயர்நிலைப் பள்ளியில் மூவாண்டு பயின்று வழிநிலைக் கல்வி முடித்து, க்ஷ சீயோன் மலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியராக அமர்ந்து ஈராண்டு பணியாற்றினேன்.

அதன்பின், யான் முன்பு மாணவராயிருந்த ஆம்பூர் சென்று அங்கிருந்த கிறித்தவப் பள்ளி உயர்பள்ளி யானபின் அதில் 1922 ஆம் ஆண்டு உதவித் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டேன். 1924

ல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறிய பின்னர் சென்னைத் திருவல்லிக்கேணிக் கெல்லற்று உயர் நிலைப் பள்ளியில் ஓராண்டு உதவித் தமிழாசிரியராகவும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் மூவாண்டு தமிழாசிரியராகவும், மன்னார்குடிப் பின்லேக் (Findlay) கல்லூரி