உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

171

உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டும், திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் ஒன்பானாண்டும், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் ஓராண்டும் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றியபின், தமிழ்ப் பற்றே வடிவெடுத்தாற் போன்றவரும் தமிழ்பண்பாட்டில் தலைசிறந்தவரும் என்மொழி நூலாராய்ச்சி முற்றுவதற்கு ஒரு பெருந் துணையாயிருந்தவரும் ஒப்புயர்வற்ற முதல்வருமான காலஞ்சென்ற பேரா.அ. இராமசாமிக் கவுண்டரின் பேரன்பினால் சேலங் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவனாக 1944 ஆம் ஆண்டு அமர்த்தப் பெற்றேன்.

அங்குப் பன்னீராண்டு பணியாற்றிப் பேராசிரியனானபின் அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழிநூல் துறை வாசக னாக (Reader) அமர்த்தப் பெற்று ஐயாண்டிருந்தும் காலஞ் சென்ற பண்டாரகர் சேதுப்பிள்ளை செய்த கேட்டினால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பு தடுக்கப் பட்டு 1961 ஆம் ஆண்டு என் பதவியும் இழந்தேன்.

அதன்பின் தமிழன்பர் பலர் தண்டித் தந்த பொருளுதவி கொண்டு இசைத்தமிழ்க் கலம்பகம், பண்டைத் தமிழ் நாகரிக மும் பண்பாடும், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் தமிழ் நூல்களும், The Primary Classical Language of World, The Language problem of Tamil Nad and its Logical Solution என்னும் ஆங்கில நூல்களையும் வெளியிட்டேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் செல்லுமுன் நான் எழுதிய நூல்களையெல்லாம் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வார வெளியீடாக வெளி யிட்டு வருகின்றது. தமிழுக்கு இன்றியமையாத பல நூல்கள் னிமேலும் என்னால் எழுதப்பெற விருக்கின்றன. அவற்றுள் தலைமையானது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி.