உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

பேரன்பரீர்,

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

28. சில கடிதங்கள்

கடிதம் : 1

மே/பா.திரு. இரா.நித்தலின்பனார்,

8/39, 11 ஆம் தெரு, தாதாபாத்து, கோவை - 12.

பக்கல் 29-5-70

வணக்கம், நாளை சன்னையிலிருப்பீர்களென்று நினைக்கின்றேன். நான் இங்குச் சென்ற ஞாயிறு வந்து சேர்ந்தேன்.

இன்று ‘கல்’ என்னும் வேர்ச்சொற்கட்டுரை பதிவஞ்சலில் விடுக்கப்பட்டுள்ளது. கூர்ந்து நோக்கி ஒரு பிழையுமின்றி அடுக்கு மாறு கோப்பாளர்க்கும், செவ்வையாகத் திருத்துமாறு மெய்ப்புத் திருத்தாளர்க்குஞ் சொல்க. தாங்களும் ஒரு முறை பார்க்க. கீழ்க் கோடிட்ட எழுத்துக்களும் சொற்களும் தடித்த எழுத்திலிருத்தல் வேண்டும், கட்டுரை 14 பக்கமாகி விட்டத னால் வேறு கட்டுரைக்குச் செல்வியில் இடமிராதென்று ‘அறு தொழிலோர் யார்?” என்னும் கட்டுரையை உடன் விடுக்க வில்லை. ஒரு கிழமை பொறுத்து, பொன்விழாச் சொற்பட்டி களுடன் சேர்த்து விடுப்பேன். வேர்ச்சொற் கட்டுரைகள் இனி ஒழுங்காக மாதந்தொறும் வரும். அவற்றிற்கு மட்டும் உடனுடன் முன்போல் அன்பளிப்புத்தொகை அனுப்பிவிடுக.

இங்கிருந்தே ‘தமிழர் வரலாறு' எழுதி முடிக்கத் திட்ட மிட்டிருப்பதால் நான் இடமாற்றம் தெரிவிக்கும்வரை எல்லா அஞ்சல்களையும் எனக்கு இங்கத்து முகவரிக்கே அனுப்பி விடுக.

வேர்ச்சொற் கட்டுரையில் ஓர் எழுத்தோ குறியோ மாறினும் பொருள் சிதைந்துவிடுமாதலின் அத்தகைய நேராவாறு மிக்க கவனமாகத் திருத்தி வெளியிடுக.

குறிப்பு : கடிதங்கள் 1 முதல் 11 வரை மேனாள் கழக ஆட்சியர் வ.சு. அவர்கட்கு எழுதியவை.