உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

173

ஆ க்கசுப்போர்டு ஆங்கிலப் பேரகர முதலி வந்தவுடன் தெரிவிக்க. பணம் உ.த.க. பொருளாளர் திரு. செந்தமிழ்க்கிழா ரிடம் உள்ளது. அவர் உடனே காசோலை அனுப்பிவிடுவார்.

திருக்குறள் பரிமேலழகருரை வை.மு. சடகோபாராமானு சாச்சாரியார் குறிப்புரையுடன் வை.மு. கோபாலகிருட்டிணமாச் சாரியார் வெளியீடு ஒருபடி உடனே எனக்கு வாங்கி வைக்க. ஞா. தேவநேயன்

கடிதம் : 2

ஆ 1135, 2-ஆம் மேற்குக் குறுக்குச்சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ. மாவட்டம்,

1-3-71

பேரன்பரீர்,

வணக்கம்.

தங்கள்: முடங்கலும் பு.பு. பட்டிக்குக் கட்டு விடுத்த செய்தி யறிவுப்பும் வந்து சேர்ந்தன. நன்றி.

6

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வேலையை ன்று தொடங்கிவிட்டேன். ஐந்தாண்டிற்குள் முடிந்துவிடும். சென்னைப் ப.க.க. அகரமுதலியில் விடுபட்டவையுட்பட எல்லாத் தமிழ்ச் சொல்லும் அதில் இடம் பெறும். குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமென்னு முண்மை அதனால் தெளிவாகும். உலகமுழுதும் பரவும் விரி வான அளவை அகர முதலியாக வெளிவரும்.

இதன் தொகுப்பும் வெளியீடும் பற்றிய திட்டம் சென்ற மாதத் தென்மொழியிதழில் உள்ளது. அதை இம்மாதச் 'செல்வி' யில் தப்பாது வெளியிட்டு விடுக. இருபக்கந்தான் வரும்.

5 உரூபா தொகுப்புச் செலவிற்கும் 5 உரூபா வெளியீட்டுச் செலவிற்குமாக மாதந்தோறும் 10 உரூபா அனுப்பும் 200 உறுப்பினர் சேர்ப்பதே அத்திட்டம். 125 உறுப்பினர்க்கு மேற் சேர்ந்து விட்டனர். மாதந்தோறும் ஆயிரம் உருபா என் வாழ்க் கைக்கும் தாள் பொத்தகம் தமிழ்த் தட்டச்சு முதலிய கருவி கட்கும் சொற்றொகுப்பும் விளக்கமும்பற்றி ஆங்காங்குச் செல்லும் வழிச் செலவிற்கும் பயன்படுத்தப்படும். மற்றோரா