உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

யிரம் வெளியீட்டிற்காக வைப்பகத்தில் இட்டு வைக்கப் பெறும். 4 மடலமாக வெளிவரும் செ.சொ.பி. அகரமுதலி ஒவ்வொர் உறுப்பினர்க்கும் ஒரு தொகுதி அன்பளிப்பாக அளிக்கப்பெறும்.

ம.அ. நூல் நிலையத்திலிருந்து தேன்மொழி வாங்கிப் படித்துத் திட்டத்தை மட்டும் ‘செல்வியில்' உடனே வெளியிடுக.

தாங்கள் குறித்துள்ளவாறு சிறு கட்டுரைத் தொடர் வேனில் கழிந்தபின் எழுதியனுப்புவேன். அன்று நூல்நிலையத் திற் பார்த்த ஆரிய தரங்கிணி-இருமடலம், 80 உருபா-உடனே வாங்கச் சொல்க. அரசினர் ‘அண்மையில் வெளியிட்ட மாவட்டத் திணை களஞ்சியங்களும் சென்னைப் ப.க.க. அகரமுதலி ஒரு தொகுதியும் வேண்டும். அடுத்த கிழமை திரு பெருஞ்சித்திரனார் அங்கு 500 உருபா கொண்டு வருவார்.

ஆங்கிலப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் ஒரு தொகு திக்கும் உடனே ஏவம் விடுக்க. வெளிநாட்டுப் பொத்தகம் வாங்கத் தடையில்லையென்று பலருஞ் சொல்கின்றனர்.

கடிதம் : 3

ஞா.தே.

ஆ 1135, 2ஆம் மேற்குக் குறுக்குச்சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மாவட்டம்,

29-3-71

பேரன்பரீர்,

வணக்கம்.

தங்கள் 27-3-71 முடங்கல் படங்களுடன் கிடைத்தது. என் மர நிலைப்பேழைகள் பல கீறியும் ஓட்டையாகியும் போய் விட்டன. அதனால் விற்றுவிட்டேன். காடரசு நிலைப்பேழையின் இற்றை விலை 700 உருபா; ஓர் அடைப்புத் தட்டுள்ளது 750. விலை இன்று மிகக் கூடியிருப்பதுடன் இருப்புத்தகடும் முன் போல் திண்ணமானதா யில்லை. அதனால், பழையது ஒன்று 400 உருபாவிற்குள் கிடைப்பின் இரண்டு வாங்கலாம். பூச்சுப் பெயர்ந்திருப்பினும் குற்றமில்லை; ஒழுக்கில்லாதிருந்தாற் போதும். பிற குழும்புகள் செய்யும் பேழைகள் விலை குறைந் திருப்பினும் உறுதியும் பாதுகாப்பும் உள்ளனவாக இல்லை. ஏலக்கடைகளிலும் பழம்பொருட் கடைகளிலும் அடிக்கடி வினவிவரச் சொல்க.